லக்னோவிடம் வீழ்ந்த மும்பைக்கு 6 ஆவது தொடர்ச்சியான தோல்வி

17 Apr, 2022 | 07:36 AM
image

(என்.வீ.ஏ.)

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை ப்ரேபோர்ன் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (16) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

KL Rahul and Rohit Sharma greet each other at the toss, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

கே. எல். ராகுல் குவித்த ஆட்டமிழக்காத சதம், ஆவேஷ் கானின் 3 விக்கெட் குவியல் என்பன லக்னோவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

KL Rahul was cautious at the top, but did play a few powerful shots, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

மறுபுறத்தில் மோசமான களத்தடுப்பு, துல்லியமற்ற பந்துவீச்சு என்பன மும்பை இண்டியன்ஸுக்கு 6ஆவது தொடர்ச்சியான தோல்வியைக் கொடுத்தது.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மாத்திரமே இதுவரை ஒரு போட்டியில் தானும் வெற்றி அடையாமல் இருக்கிறது.

Fabian Allen sent back Quinton de Kock in his first over, on his Mumbai debut, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைக் குவித்தது.

KL Rahul and, especially, Quinton de Kock were off the blocks quickly, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

ஆரம்ப வீரர் கே.எல். ராகுல் 20 ஓவர்களும் தாக்குப்பிடித்து 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். 

KL Rahul and Manish Pandey strung a strong second-wicket partnership, Mumbai Indians vs Lucknow Super Giants, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

60 பந்துகளை எதிர்கொண்ட அவர், 9 பவுண்டறிகளையும் 5 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார்.

Manish Pandey is bowled by Murugan Ashwin, Mumbai Indians vs Lucknow Super Giants, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

இதனிடையே 25 ஓட்டங்களைப் பெற்ற குவின்டன் டி கொக்குடன் ஆரம்ப விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்த ராகுல், 38 ஓட்டங்களைப் பெற்ற மனிஷ் பாண்டேயுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

KL Rahul hit his second IPL ton against Mumbai Indians, Mumbai Indians vs Lucknow Super Giants, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

மார்க்ஸ் ஸ்டொய்னி 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து தன்னுடன் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த திப்பக் ஹூடாவுடன் மேலும் 43 ஓட்டங்களை ராகுல் பகிர்ந்தார்.

KL Rahul celebrated his hundred in typical style, Mumbai Indians vs Lucknow Super Giants, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

ஹூடா 15 ஓட்டங்களைப் பெற்றார்.

KL Rahul gets a hug from Deepak Hooda after reaching his century, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

மும்பை பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

Marcus Stoinis is overjoyed after getting Ishan Kishan to play on, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

இஷான் கிஷான் (13), அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (6) ஆகிய இருவரும் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியமை மும்பை இண்டியன்ஸுக்கு பெரும் சிக்கலைத் தோற்றுவித்தது.

Suryakumar Yadav walked in at a tricky time and controlled the middle overs for Mumbai, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

இளம் அதிரடி வீரர் டிவோல்ட் ப்றெவிஸ் (13 பந்துகளில் 31), சூரியகுமார் யாதவ் (27 பந்துகளில் 37) ஆகிய இருவரும் அணியைக் கட்டி எழுப்ப எடுத்த முயற்சி கைகூடாமல் போனது.

Kieron Pollard found his range straightaway, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

இவர்கள் இருவரைவிட திலக் வர்மா (26), கீரன் பொலார்ட் (25), ஜெய்தேவ் உனத்கட் (14) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற மற்றைய துடுப்பாட்ட வீரர்களாவர்.

Easy does it! Quinton de Kock knocks off the bails to run Jaydev Unadkat out in the last over, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

லக்னோ பந்துவீச்சில் ஆவேஷ் கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளைக் கைப்பற்றினார்.

As long as Kieron Pollard was around, Mumbai had hope, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

Tymal Mills' reaction sums up Mumbai Indians' season, Lucknow Super Giants vs Mumbai Indians, IPL 2022, Brabourne Stadium, Mumbai, April 16, 2022

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41