பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் போல் உருமாறிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பாலோ என்ற 33 வயதுடைய நடிகர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் தன்னுடைய திறமையினால் முக்கிய பிரபலங்களை போல் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டவர். 

இவர் அண்மையில் உலகில் பிரபல நட்சத்திர நடிகைகளான மாறிச் காரே, மடோனா, பேயொன்ஸ், மைலி சைரஸ், ரிஹான்னா மற்றும் ஏஞ்சலினா ஜோலி போன்றும் தன்னை உருமாற்றியுள்ளார்.

பெண்களை போல் மாறுவதில் பாலோ ஒரு தலைசிறந்தவர் தான் என்று கூறவேண்டும். இப்படி பண்முகத்தன்மை கொண்ட இவர் முக்கிய பிரபலங்கள் போல் மாறுவதற்கு அதிகப்படியான செலவுகள் எல்லாம் செய்வதில்லை. சாதரணமாக பெண்கள் பயன்படுத்தும் அழுகு சாதனப் பொருட்களையே பயன்படுத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் போன்று பாலோ மாறியுள்ளார். இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். 

அதுமட்டுமில்லாமல் முதலில் தான் எவ்வாறு இது போன்று செய்கிறேன் என்பதை வெளியில் கூறாமல் இருந்த பாலோ தற்போது கேட் மிடில்டன் போல் மாறியது எப்படி என்பதைப் போன்ற வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதைத் தொடர்ந்து 1993 ஆண்டுகளில் இருந்த இளவரசியான டையானாவைப் போன்றும் மாறியது எப்படி என்பதைப் போன்ற புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.