பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ; இலங்கை உத்தேச குழாத்தில் மொஹம்மத் ஷிராஸ்

16 Apr, 2022 | 07:31 AM
image

(என்.வீ.ஏ.)

பங்களாதேஷுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை முன்னிட்டு 23 வீரர்களைக் கொண்ட உத்தேச இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

வழமைபோல் திமுத் கருணாரட்ன அணித் தலைவராகவும் தனஞ்சய டி சில்வா உதவி அணித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

உத்தேச குழாத்தில் இதுவரை தேசிய அணியில் இடம்பெறாத வேகப்பந்துவீச்சாளர் மொஹம்மத் ஷிராஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் திறமையாக பந்துவீசியதால் மொஹம்மத் ஷிராஸ் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆனால், இந்தியாவுக்கு எதிராக கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்ற சில வீரர்கள், பங்களாதேஷுக்கு விஜயம் செய்யவுள்ள குழாத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

லஹிரு திரிமான்ன, சரித் அசலன்க ஆகியோர் இலங்கை குழாத்தில் இணைக்கப்படாததுடன் ரோஷேன் சில்வா, ஓஷத பெர்னாண்டோ ஆகிய இருவரும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

உத்தேச குழாத்தில் இருந்து இறுதி 18 வீரர்கள் தெரிவுசெய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சித்தாகொங்கில் மே 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் மே 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன  .

முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாக சட்டோக்ராம் விளையாட்டரங்கில் 2 நாள் (மே 11, 12) பயிற்சிப் போட்டியில் இலங்கை விளையாடும்.

இலங்கை உத்தேச குழாம்

திமுத் கருணாரட்ன (தலைவர்), தனஞ்சய டி சில்வா (உதவித் தலைவர்), ஓஷத பெர்னாண்டோ, பெத்தும் நிஸ்ஸன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், கமில் மிஷார, குசல் மெண்டிஸ், ரோஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தினேஷ் சந்திமால், ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன, கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, ஷிரான் பெர்னாண்டோ, மொஹமத் ஷிராஸ், ப்ரவின் ஜயவிக்ரம, லசித் எம்புல்தெனிய, ஜெவ்றி வெண்டர்சே, லக்ஷித்த முனசிங்க, சுமிந்த லக்ஷான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41