மக்கள் போராட்டம் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் அரசியல் யாப்பு கட்டமைப்புடன் நிறைவடைய வேண்டும் - மார்ச் 12 அமைப்பு

Published By: Digital Desk 5

15 Apr, 2022 | 06:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்) 

மக்கள் போராட்டம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் அரசியல் யாப்பு ரீதியான கட்டமைப்புடன் நிறைவடைய வேண்டும். 

மக்கள் பிரதிநிதிகளின் திமிர்பிடித்த, முதிர்ச்சியடையாத செயற்பாடுகள் காரணமாகவே இலங்கை இந்தளவு நெருக்கடியான மற்றும் தீர்மானம் மிக்க கட்டத்துக்கு மிகவும் வேகமாக வந்துள்ளது என நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்றுபட்டிருக்கும் மக்கள் போராட்டம் தொடர்பாக  மார்ச் 12 அமைப்பு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு்ள்ளதாவது,

எமது ஆட்சியாளர்கள் அரை நூற்றாண்டுக்கு கூடுதலான காலம் பின்பற்றி வந்த முறைசாரா பொருளாதார மற்றும் ஆட்சியியல் கொள்கைகளை நிராகரிக்கும் அரசியல் சமூகம் இந்த நாட்டில் உருவாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31 திகதி குடிமக்கள் வீதியில் இறங்கியதிலிருந்து அது ஆரம்பமானது.

மக்கள் பிரதிநிதிகள் தமக்கு கிடைத்த மக்கள் ஆணை மூலம் கிடைத்த கொள்கை வகிக்கும் பொறுப்புக்கு முரணாக நிவாரணங்களை வழங்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளாக இருப்பதனால் இருண்ட எதிர்காலத்தை நோக்கி வேகமாக இழுபட்டுச் செல்லும் நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக முன்வந்த மற்றும் முன்வந்து கொண்டிருக்கும் அனைத்து பிரஜைகளுக்கும் மார்ச் 12 இயக்கத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகும். 

நாமும் ஏழு ஆண்டு காலமாக இவ்வாறான பாங்கிலான வினைத்திறனான பிரஜைகளை உருவாக்குவதற்காக முயற்சியெடுத்து வந்தோம். இருப்பினும், இந்த மக்கள் போராட்டம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் அரசியல் யாப்பு ரீதியான கட்டமைப்புடன் நிறைவடைய வேண்டும்.

எனவே மக்கள் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் அனைவரும் மிகவும் அமைதியான வழிமுறைகளை பின்பற்றுவார்கள் என நம்புகிறோம். 

சிறந்த நாட்டை உருவாக்குவோம் என்பதே நாட்டில் நாளுக்கு நாள் தோற்றம் பெறும் மக்கள் போராட்டத்தின் பொதுவான பண்பாகும். எனவே, முதலில் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அந்த பிரஜைகளின் செய்தி என்ன என்பதனை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன், வழக்கமான, ஏளனமான பதில்வினையாற்றலை புறந்தள்ளி அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு உடனடியாக தயாராக வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் திமிர்பிடித்த, முதிர்ச்சியடையாத செயற்பாடுகள் காரணமாகவே இலங்கை இந்தளவு நெருக்கடியான மற்றும் தீர்மானம் மிக்க கட்டத்துக்கு மிகவும் வேகமாக வந்துள்ளது. மக்களின் இறைமை அதிகாரத்தை மதிப்பதாக தமது உணர்வுகள் மூலமாக கூட வெளிப்படுத்த முடியாதளவுக்கு அதிகார மனதை கொண்டவர்களாவர். அந்த செயற்பாட்டின் விளைவை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள்.

எனவே, நாட்டில் ஆங்காங்கே உருவாகும் மக்கள் அணிதிரழ்வுகளை வன்முறையாக ஒடுக்க முற்படுவதனை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், நாட்டின் உண்மையான நிலைமை தொடர்பாக ஆங்காங்கே சொல்லப்பட்ட தவறான கருத்துக்களும் எமது நாட்டு மக்கள் இவ்வளவு வேகமாக முன்வருவதற்கான பிறிதொரு காரணமாகும். எனவே, நாம் பொருளாதார ரீதியாக எந்த நிலையில் இருக்கிறோம் என்பதனை மூடி மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன், சுய இலாபம் அல்லது குறுகிய அரசியல் நோக்கத்துடன் தீர்மானமெடுத்தல், நிபுணர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாமை, மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களின் தாமதம் போன்ற தவறான கொள்கைகள் காரணமாக இலங்கை இவ்வளவு தூரம்  பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்த இடத்திலிருந்து விரைவான மற்றும் சரியான தீர்மானம் மேற்கொள்ளும் தூய்மையான மற்றும் வினைத்திறனான தலைமைத்துவம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்பட வேண்டும். எதிர்காலத்தில் உருவாக்கப்படும் ஏதாவது பொறிமுறையில் அவ்வாறான தலையீட்டில் இணைந்து கொள்ளும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சலுகைகள் அற்ற அர்ப்பணிப்புக்கு தயாராக வேண்டும். அத்துடன், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான எவரும் புதிய பொறிமுறையில் பங்காளர்களாக இருத்தலாகாது.

அத்துடன் எந்த மாதிரியான போராட்ட முறைகள் வெளிப்படுத்தப்பட்டாலும், எந்தவொரு தந்திரோபாயமும் அல்லது முறைமை ஜனநாயக வரையறைகளுக்கு புறம்பானதாக இருத்தலாகாது.  ஜனநாயக பாதைக்கு புறம்பாக மேற்கொள்ளும் தந்திரோபாயமும் கடுமையாக பாவிக்கப்படும் போக்கு உருவாகலாம்.

எனவே, இந்த பலவீனமான வேளை உண்மையான அரசியல் யாப்பு மறுசீரமைப்பை அறிமுகம் செய்யும் ஏகோபித்த நோக்கத்துக்காக பாவிக்கப்பட வேண்டும். மிகவும் தவறான கட்டமைப்பில் ஆகக்குறைந்த தகைமைகளைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகளை நியமித்து, சில வேளைகளில் ஊழல் நிறைந்த பிரதிநிதிகளை மீண்டும் நியமித்து தவறான முன்மாதிரியை நீங்களும், நாங்களுமே வழங்கியுள்ளோம். எனவே, நாட்டின் எதிர்காலத்தை நல்லாட்சி கட்டமைப்பை நோக்கி திசைமுகப்படுத்தும் ஆரம்ப பிரவேசமாக இந்த போராட்ட கருப்பொருளை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கிறோம். 

இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் பின்னர் சமூகத்தில் மக்கள் பிரதிநிதி தமது பொறுப்பை நிறைவேற்றாதிருப்பதின் தாக்கமே “பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் வேண்டாம்" எனும் கோசத்தின் உண்மையான அர்த்தமாகும்.

இன்றும் தமது பொறுப்பை நிறைவேற்றும் சில மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர் என மார்ச் 12 இயக்கம் என்ற வகையில் நாம் நம்புகிறோம். எனவே, முறைமையில் முன்மாதிரியான மாற்றத்தை செய்வதனை விடுத்து, பாராளுமன்ற பிரதிநிதிகளை புறந்தள்ளுதல் பிற்போக்கான அரசியல் தந்திரோபாயம் என தெரிவிக்க விரும்புகிறோம்.

அதற்கமைய, மக்கள் போராட்டத்தின் பெறுமானத்தை நோக்காக கொண்ட குறுங்கால தீர்வை உடனடியாக காண்பதற்காக பாராளுமன்றம் செயற்பட வேண்டும். மக்கள் போராட்டத்தை ஆபத்தில் தள்ளுவதற்கான விருப்பம் நிறைவேற்று அதிகாரத்தை கொண்டவரிடம் இருந்தால் அவ்வாறான எந்தவொரு முயற்சியை பாராளுமன்றம் அங்கீகரிக்காது என நாம் உறுதியாக நம்புகிறோம்.

பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் ஏதாவது முயற்சியும், அது நாட்டின் பேண்தகு இருப்புக்கான அரசியல் யாப்பு மறுசீரமைப்புக்காக பாவிக்கப்பட வேண்டும். அதன் போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் கட்டாய நிபந்தனையாக இருத்தல் வேண்டும்.

மேலும், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளுதல் முன்னுரிமையான விடயம் என்பதனால் பொருளாதாரம் தொடர்பான நிபுணத்துவ அறிவுள்ள நபர்கள் பொது உடன்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற செயன்முறையுடன் இணைக்கப்படுதல் நாட்டின் எதிர்கால நிலைத்திருப்புக்கு நன்மை பயக்கும்.

தேவை ஏற்பட்டால், தேசிய பட்டியலை பாவிப்பதன் மூலம் அவ்வாறான நிபுணர்களுக்கு கூடுதலான வாய்ப்புகளை வழங்கலாம். ஏற்கனவே சிறிய தொகையினரின் எதிர்பார்ப்புகளை மட்டும் நிறைவேற்றும் பொருளாதார ஆலோசனை குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்  எனவும் முன்மொழிகிறோம்.

அத்துடன் 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் ரத்து செய்யப்படுதல் மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55