ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே இணைப்பின் வீழ்ச்சி

Published By: Siddeque Kariyapper

15 Apr, 2022 | 05:27 PM
image

ரஷ்யா - உக்ரைன் மோதலின் பெரும் பயனாளியாக சீனா உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் திசைதிருப்பப்பட்ட, வுஹான் வைரஸ் பரவுவதில் சீனாவின் பங்கையும், அதனுடன் இணைக்கப்பட்ட மீளமுடியாத பொருளாதார மற்றும் மனித இழப்புகளையும் உலகம் கிட்டத்தட்ட மறந்து விட்டுள்ளது.

ரஷ்யப் படைகள் கியூவைக் கைப்பற்றுமா என்று முழுமையாக கவனம் செலுத்திய மேற்கத்திய ஊடகங்கள், ஜனநாயக நிறுவனங்கள் மீதான சீனாவின் தாக்குதல்கள், ஹாங்கொங் மீதான கெடுப்பிடிகள், சின்ஜியாங் மற்றும் திபெத்தில் இனப்படுகொலை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவு உட்பட தைவானை கைப்பற்ற சீனாவின் எதிர்கால திட்டங்கள் என்பவையும் தற்போது மறக்கப்பட்ட விடயங்களாகியுள்ளன.

உக்ரைனில் ரஷ்யாவின் வெற்றியை உறுதிப்படுத்த சீனா ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி, ரஷ்யாவிற்கு தார்மீக மற்றும் மூலோபாய ஆதரவை வழங்குமாறு பெய்ஜிங் தனது நட்பு நாடுகளான பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெய்ஜிங்கின் ஆலோசனையின் பேரில், போர் தொடங்கிய நாளில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மொஸ்கோவுக்குச் சென்றார். சிரியர்கள் மற்றும் செச்சினியர்களைப் போலவே, ரஷ்யாவிற்கு கூலிப்படையின் கூடுதல் ஆள்பலம் தேவைப்படும் பட்சத்தில் பாகிஸ்தானிய இராணுவம் பின்தங்கியிருக்க விரும்பவில்லை. மாறாக துணைப்போகும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்நது.

பாரசீக வளைகுடா மற்றும் மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் மூலோபாயப் பங்கை சீனா கவனத்தில் கொள்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நங்கூரமாகப் பயன்படுத்தவும் விரும்புகிறது. இதனால் தான் பல பில்லியன் டொலர்கள் சீனா பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் மூலம் பாகிஸ்தானிய அரசியலில் சீனா ஒரு பங்கைக் கட்டியெழுப்பியுள்ளது.

பாக்கிஸ்தானிய அரசியல்வாதிகள் மற்றும் இராணுவ ஜெனரல்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. மறுப்புறம் இவற்றுக்கான இரகசியத்தை பேண வேண்டும் என்ற சீனாவின் வலியுறுத்தல் பாகிஸ்தானின் அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

எவ்வாறாயினும், பாக்கிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒரே பௌதிக வழிப்பாதை ஐ.நா-வால் அறிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசமான கில்கிட்-பால்டிஸ்தான் வழியாகச் செல்வதால், இந்த உறவு பாறைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது இராணுவத்தை ஜிபியில் இருந்து விலக்கி, சட்டவிரோத முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை எதிர்பார்க்கிறது. இருப்பினும், பல தசாப்தங்களாக, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி இந்த பகுதியை சின்ஜியாங்கின் விரிவாக்கமாக மாற்ற முயற்சிக்கிறது.

பாக்கிஸ்தான், ரஷ்யா மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவியுடன், சகவாழ்வு, சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை ஆகியவற்றை விரும்பும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளை அச்சுறுத்தும் மற்றும் தனிமைப்படுத்தும் சீனா மட்டுமே தைரியமாக இருக்கும்.

நிதி உதவிக்காக பெய்ஜிங்கைச் சார்ந்திருக்கும் நாடுகளில் மேல்-கீழ் எதேச்சதிகார ஆட்சியின் மாதிரியானது அரசியலமைப்பு மேலாதிக்கத்தை ஆபத்தில் ஆழ்த்தி, அதன் குடிமக்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

ஜனநாயக அமைப்புகளையும், திறந்த எல்லைகளையும், சுதந்திர வர்த்தகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் ஒரு இணைப்பு கில்ஜிட் மற்றும் சின்ஜியாங்கிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10