சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்ப விசேட போக்குவரத்து

Published By: Digital Desk 5

15 Apr, 2022 | 10:00 AM
image

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச்சென்ற மக்கள் , மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (15) முதல் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.

மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு வருவதற்கான தேவையான பஸ் சேவைகளை இன்று தொடக்கம் மேற்கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்களும் இன்று முதல் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.

இதேவேளை ,வழமையான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக இன்று விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில்வே திணைக்களம் ஏற்கனவே அறிவித்த படி பின்வரும் விசேட கடுகதி ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் நாளை 17 ஆம் திகதி விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து இந்த ரயில் இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு கல்கிசையை காலை 6.00 மணிக்கு வந்தடையவுள்ளது.

இதேபோன்று, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் நாளை ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

இந்த ரயில் பதுளையில் இருந்து மாலை 08.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.50 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

பெலியத்தைக்கும் மருதானைக்கும் இடையில் நாளை விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30