மைத்திரி தொடர்பான நடவடிக்கை அடிப்படை உரிமை மீறல் மனுவின் தீர்மானத்தின் பின்: பொலிஸ் பேச்சாளர் 

13 Apr, 2022 | 09:53 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் விவகரத்தில், தாக்குதலை தடுக்காமை தொடர்பில் விரல் நீட்டப்படும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன தொடர்பிலான பொலிஸ் நடவடிக்கைகள், உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களின்  தீர்மானத்தை அடுத்து முன்னெடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற,  உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவும் பல கருத்துக்களுக்கு தெளிவினை வழங்குவதற்காக எனக் கூறி ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

 பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னவின்  தலைமையில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல ஜகத் டயஸ்,  பொலிஸ் மா அதிபர்  சந்தன விக்ரமரத்ன,  சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன டி அல்விஸ் ஆகியோர்  பங்கேற்றனர்.

 இதன்போது,  தாக்குதல்களை தடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக விசாரணைகள்  இடம்பெறுகின்றனவா, அதன் தற்போதைய நிலைமை என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

 அதற்கு பதிலலித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன

' முன்னாள் ஜனாதிபதி தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  ஆரம்ப சந்தர்ப்பத்திலேயே சி.ஐ.டி.யினர் அவரிடம் வாக்கு மூலம் ஒன்றினையும் பதிந்துள்ளனர். 

எனினும் தற்போது, தாக்குதலை தடுக்காமை தொடர்பில் 12  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

 அவை குறித்த விசாரணைகள் நிலுவியில் உள்ளன். எனவே அந்த  அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்மானம் சிரேஷ்டமானது. அதனை அடிப்படையாக கொண்டு சி.ஐ.டி.யினர் முன்னாள் ஜனாதிபதி விடயத்தில் மேலதிக நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பர். ' என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04