அனைத்து தலைவர்களையும் அழைத்து கலந்துரையாட தீர்மானம் - மல்வத்து பீடம்

Published By: Siddeque Kariyapper

13 Apr, 2022 | 11:42 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு மக்கள் பிரநிதிகள் கடந்த வாரம் பாராளுமன்றில் செயற்பட்ட விதம் கவலைக்குரியதாக அமைந்துள்ளதுடன், கண்டிக்கத்தக்கதாகவும் காணப்படுகிறது.

மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அரச தலைவர்களையும்,அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க  முப்பீடங்களும் கூட்டாக தீர்மானித்துள்ளதாக மல்வத்து பீடத்தின் செயலாளர் பஹமுன சுமங்கல தேரர் தெரிவித்தார்.

அஸ்கிரிய பீடம்,மல்வத்து பீடம் மற்றும் அமரபுர நிகாய ஆகிய முப்பீடங்களின் மகாநாயக்கர்கள் சனிக்கிழமை (09.04.2022) மல்வத்து பீடத்தில் ஒன்றிணைந்து நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

முப்பீடங்களின் சந்திப்பு குறித்து மல்வத்து பீடத்தின் செயலாளர் பஹமுன சுமங்கல தேரர் குறிப்பிட்டதாவது,

நாடு என்றுமில்லாதவாறு பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி நாட்டு மக்களை வீதிக்கிறக்கியுள்ளது. அரச கட்டமைப்பிலும் குளறுபடிகள் இருப்பதை நன்கு அவதானிக்க முடிகிறது.

ஆட்சியதிகாரத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல வழங்கப்பட்ட ஆலோசனைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பது தற்போது தெளிவாகிறது.

பிரச்சினைக்கு யார் காரணம் என குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் இனி ஏதும் மாற்றடைய போவதில்லை.மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

நாட்டு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு மக்கள் பிரதிநிதிகள் கடந்த வாரம் பாராளுமன்றில் செயற்பட்ட விதம் பெரும் கவலையினை தோற்றுவித்துள்ளதுடன் கண்டிக்கத்தக்கதாகவும் அமைந்துள்ளது.இவ்வாறான நிலைமையை நாம் எதிர்பார்க்கவில்லை.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் ஏதாவதொரு சிறந்த வழிமுறையில் துரிதகரமாக தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். அரச தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58