இதுபோன்றதொரு ஆட்சியை  என் வாழ்நாளில் கண்டதில்லை - பிரபல பாடகி நந்தா மாலினி தெரிவிப்பு       

12 Apr, 2022 | 08:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

என் வாழ்வில் இதுபோன்று மக்களை துயரத்திற்குள்ளாக்கிய  ஆட்சியை கண்டதுமில்லை,  கேள்விப்படவுமில்லை.  இளைஞர்களின் தன்னிச்சையான போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும், முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாடகி நந்தா மாலினி தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகம் முன்பாக இளைஞர்களினால் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டத்தில் நேற்றைய தினம் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு கேவலமானதும்,மக்களை துயரத்திற்குள்ளாக்கிய ஆட்சியை ஒருபோதும் கண்டதுமில்லை ,கேள்விப்பட்டதுமில்லை.அதேபோல் இளைஞர்களின் தன்னிச்சையான போராட்டத்தையும் நான் கண்டதில்லை.

அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னிச்சையாக இளைஞர்கள் ஒன்றினைந்துள்ளார்கள், தங்களுக்கு தேவையானவற்றை இளைஞர்கள் கோரவில்லை.

வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து இளைஞர்கள் எதிர்கால தலைமுறையினருக்காக நாட்டையே கோருகிறார்கள்.

'புதிய உலகம் பற்றி நினைப்பது தண்டனைக்குரிய குற்றமாயின் நாட்டில் நீதிமன்றம் மற்றும் சட்டம் எதற்கு'

நாம் குறிப்பிட்ட விடயங்கள் இன்று இளம் தலைமுறையினர் விளங்கிக்கொண்டுள்ளார்கள், இளம் தலைமுறையினரின் போராட்டம் நிச்சயம் வெல்லும்.முழுமையான ஆதரவு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37