நெருக்கடியான சூழல் முடிவுற்று செழிப்பு நிறைந்த புத்தாண்டு மலரட்டும் - சஜித் புத்தாண்டு வாழ்த்து  

12 Apr, 2022 | 05:56 PM
image

பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மிக ஆபத்தான நிலைக்கு முழு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில்  மக்களின் சாதாரண வாழ்க்கை தரம் அசாதாரண முறையில் சவாலுக்கு உள்ளாகியுள்ளது என்றும் இந்த நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாளாக இன்றைய நாள் பிறந்து கனவுகள் நனவாக தான் பிரார்த்திப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது விசேட புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யுகத்தின் மாபெரும் கலாசார நிகழ்வாக கருதப்படும் சிங்கள, தமிழ் புத்தாண்டு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கு சுபீட்சமான புத்தாண்டாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நாட்டு மக்கள் நீண்ட காலமாக சிங்கள,தமிழ் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும் கடந்த இரு வருடங்களுக்கு முன்பிருந்து நாட்டில் சிங்கள, தமிழ் புத்தாண்டு பிறந்தது பூமியின் குரலில் அல்ல. 

மாறாக கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுறுத்தல்களின் குரலிலேயே பிறந்தது என்றும் செழிப்பு நிறைந்த பாடத்தை கற்றுத்தரும் சிறப்பான புத்தாண்டு இம்முறை  குடிமக்களை சுத்தமான உணவை சமைக்கும் தயகத்திற்குள் தள்ளிவிட்டு பிறந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிறைவுப் பொருளாதார நாடாக இருந்த நாடு இன்று கண்ணீர் சிந்தும் தேசமாக மாறியுள்ளதுடன் முழு குடும்பமும் மகிழ்ச்சியாக, அமைதியாக மற்றும் நிம்மதியாகவும் புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பையும்  இழந்துள்ளது.

ஒருபுறம் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் அலைக்களிக்கப்படுவதுடன் மறுபுறத்தில் இளைய தலைமுறையினர் வீதிக்கு இறங்கி அரசாங்கத்திற்கு எதிராக தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர்.

நல்லதொரு எதிர்கால தலைமுறையினர் கனவை நனவாக்கும் நோக்கில் நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மகத்தான தியாகங்களை செய்த மக்களை மீண்டும் தியாகம் செய்ய கூறுவதை விடுத்து நடைமுறையில் ஆட்சியாளர்கள் அந்த செயற்பாட்டை முன்னெடுப்பது மிக அவசியமானது என்றும் நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த இன்றைய நாள் பிறந்து கனவுகள் நனவாக பிரார்த்திப்பதாகவும் அனைவருக்கும் வெற்றிகள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32