சந்தேகத்திற்கிடமான படகை விரட்டிய கடற்படை படகு விபத்து : கடற்படை வீரர் சடலமாக மீட்பு

12 Apr, 2022 | 03:59 PM
image

நெடுந்தீவு கடற்பரப்பில்  சந்தேகத்திற்கு இடமான படகுகளை துரத்திய இலங்கை கடற்படை படகுகள் இரண்டு மோதி விபத்துக்கு உள்ளானதில் , கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போன நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

நேற்றைய தினம் திங்கட்கிழமை நெடுந்தீவுக்கு தொலைவில் , இந்தியா பக்கமாக இருந்து வந்த சந்தேகத்திற்கு இடமான இரண்டு படகுகளை கடற்படையினர் மறிக்க முற்பட்ட போது , குறித்த படகுகள் கடற்படையின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ளது. 

அதனை அடுத்து கடற்படை படகுகள் அவர்களை விரட்டிய போது , கடற்படைக்கு சொந்தமான இரண்டு படகுகள் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. 

அதன் போது படகில் இருந்த நான்கு கடற்படையினர் கடலில் தவறி விழுந்த நிலையில் மூவர் ஏனைய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 

ஒருவர் காணாமல் போயிருந்தார், காணாமல் போனவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வந்த நிலையில் காரைநகர் கடற்பரப்பில் காணாமல் போன கடற்படை வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அதேவேளை மீட்கப்பட்ட மூன்று கடற்படையினரில் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59