மருந்துப்பொருட்களை வழங்குமாறு சர்வதேசத்திடம் கோருவது சுகாதார அமைச்சின் இயலாமையையே - அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை

Published By: Siddeque Kariyapper

13 Apr, 2022 | 05:43 AM
image

(நா.தனுஜா)

நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்குமாறு சில அமைப்புக்களும் தனிநபர்களும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக அறியமுடியகின்றது.

இது நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்குரிய இயலுமை சுகாதார அமைச்சிற்கு இல்லை என்பதையே காண்பிக்கின்றது என்று சுட்டிக்காட்டியிருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை, மருந்துப்பொருட்களுக்கான நெருக்கடி நிலையொன்று காணப்படும் பட்சத்தில் அதனை சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியநிபுணர் சஞ்சீவ முனசிங்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நிதிநெருக்கடியின் காரணமாக மருத்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விநியோகத்திலும் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது.

தற்போதைய நிலைவரத்தை ஆராய்ந்து பார்க்கும்போது எதிர்வரும் இருவாரங்களில் நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பமுடியும் என்று நம்புகின்றோம்.

எதுஎவ்வாறெனினும் சில தொழிற்சங்கங்களும் மருத்துவ அமைப்புக்களும் மருந்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குமாறு சர்வதேசத்திடம் உதவி கோரியிருக்கின்றன.

 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற அமைப்பு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் வாழும் இலங்கைப்பிரஜைகள் மூலம் அறியமுடிந்துள்ளது.

அதுமாத்திரமன்றி மேலும் சில அமைப்புக்களும், தனிநபர்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவதானிக்கமுடிகின்றது.

இது தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான இயலுமையை சுகாதார அமைச்சு கொண்டிருக்கவில்லை என்பதை நன்கு வெளிப்படுத்துகின்றது.

உணவு, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பன சுகாதார அமைச்சின் தலையீடின்றி தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவுமாறு பிரசாரம் மேற்கொள்ளக்கூடிய பொருட்கள் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

எனவே இத்தகைய தேவைப்பாடொன்று காணப்படுமாயின், அதற்குரிய வசதிகள் சுகாதார அமைச்சினால் ஏற்படுத்தப்படவேண்டும்.

 அதேவேளை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்திய அமைப்பொன்று தற்போது அதற்குத் தீர்வுகாண்பதற்கு முன்வந்திருப்பது வேடிக்கையான விடயமாகும் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53