தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் 3 பேர் புதிய சாதனை படைப்பு

12 Apr, 2022 | 03:06 PM
image

(எம்.எம்.சில்‍வெஸ்டர்) 

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் நிலானி ரத்நாயக்க, கயந்திகா அபேரத்ன, சச்சினி பெரேரா ஆகிய மூவரும் புதிய தேசிய சாதனைகளை நிலை நாட்டினர்.

அடை மழை காரமணாக எஞ்சிய போட்டிகள் எதிர்வரும் 23 ஆம்  திகதியன்று நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதில், பெண்களுக்கான 3000 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டப் போட்டியில் நிலானி ரத்நாயக்க  9 நிமிடங்கள் 40.25  செக்கன்களில் நிறைவு செய்து, தனது சொந்த சாதனையை முறியடித்தார். 

இப்போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே நிதர்சனி மற்றும் உதயகுமாரி பிடித்தனர். 

பெண்களுக்கான  800 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்த  கயந்திக்கா அபேரட்ண போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 01.44 செக்கன்களில் ஓடி முடித்திருந்தார்.

இப்போட்டியில் நிமாலி லியனாராச்சி இரண்டாம் இடத்தையும், தருஷி கருணாரட்ண மூன்றாமிடத்தையும் பிடித்தனர். 

இப்போட்டியை 2 நிமிடங்கள் 04.40 செக்கன்களில் நிறைவு செய்த தருஷி கருணாரட்ண இலங்‍கையின் கனிஷ்ட சாதனையைப் படைத்தார்.

பெண்களுக்கான  கோளூன்றி பாய்தலில் சச்சினி பெரேராவும், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் ருசிரு சத்துரங்கவும் புதிய தேசிய சாதனையுடன் முதலிடம் படைத்தனர். 

பெண்களுக்கான கோளூன்றிப் பாய்தலில் 3.71 மீற்றர் உயரம் தாவிய சச்சினி பெரேரா புதிய தேசிய சாதனை படைத்தார். 

இதற்கு முன்னர் சச்சினி பெரேராவால் 3.70 மீற்றர் உயரத்தை தாவியிருந்தமையே  தேசிய சாதனையாக இருந்தது.

இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த  அமேஷா ஹெட்டியாராச்சி 56.89 செக்கன்களில் நிறைவு செய்து புதிய கனிஷ்ட சாதனையை படைத்தார். 

இப்போட்டியில் முதலிடத்தை நதீஷா ராமநாயக்க (53.73 செக்.) பெற்றதுடன், இரண்டாம் இடத்தை உத்தரா (54.96 செக்.) பெற்றிருந்தார். 

மேலும், பெண்களுக்கான நீளம் பாய்தலில் முதலிடம் பிடித்த சாரங்கி சில்வா 6.25 மீற்றர் தூரம் பாய்ந்திருந்தார்.

இது புதிய போட்டிச் சாதனையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41