புத்தாண்டை போராட்ட களத்திலேயே கொண்டாடுவோம் ! ஜனாதிபதி செயலகத்தின் முன் தொடரும் ஆர்ப்பாட்டம்

11 Apr, 2022 | 09:49 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. 

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு , அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

May be an image of one or more people, people standing and outdoors

பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

May be an image of one or more people, people standing, crowd, monument and outdoors

கடந்த இரு தினங்களாகப் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மலர் வலயம் வைத்து , மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பினை வெளியிட்டமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

May be an image of one or more people, people standing, outdoors and crowd

புத்தாண்டை இங்கு கொண்டாடுவோம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் , யுவதிகள் தாம் தமிழ் - சிங்கள புத்தாண்டையும் இந்த இடத்திலேயே கொண்டாடுவோம் என்று அறிவித்துள்ளனர். அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் , சகோதரத்துவத்துடனும் போராட்டத்தையும் கைவிடாது , அதே வேளை புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

May be an image of 3 people, people sitting and people standing

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

இரவு நேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையால் கொழும்பு - காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கடந்த மூன்று நாட்களிலும் அப்பகுதியில் எவ்வித அமைதியற்ற நிலைமையோ அல்லது வன்முறைகளோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் மலசலகூடங்கள்

தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோரின் நலன் கருதி உணவு மற்றும் குடிநீர் என்பவை வழங்கப்படுவதோடு மாத்திரமின்றி , சமூக சேவையாளர்களால் நடமாடும் மலசலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவீன முறையில் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி மருத்துவ முதலுதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்றத்திடம் அதிகாரத்தை வழங்குங்கள்

May be an image of one or more people, people standing, road and crowd

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருக்கும் வரை எமது போராட்டம் ஓயப் போவதில்லை. அவர் பதவிலியிருந்து விலகி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கையளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்படும் தலைவரால் நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர் யுவதிகள் தெரிவித்தனர்.

அவ்வாறில்லை எனில் தமது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மக்கள் அனைவரும் தற்போது எச்சரிக்கையாகவே உள்ளனர். இனிமேலும் முட்டாள்களாக யாரும் தயாராக இல்லை. இதற்காக மரணிக்கவும் தயாராகவே உள்ளோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

May be an image of one or more people, crowd and outdoors

ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள்

இது தவிர நேற்றைய தினம் நாட்டின் மேலும் பல பகுதிகளிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய திருகோணமலை மகாசங்கத்தினரின் ஏற்பாட்டடில் எதிர்ப்பு பேரணியும் , ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் பெருமளவான இளைஞர் யுவதிகளும் பங்குபற்றினர். மேலும் காலி , அரகலன்வில, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வெளிநாட்டவர்களும் ஆர்ப்பாட்டம்

May be an image of 2 people and sky

இதே வேளை அம்பலாங்கொட - கஹவ பிரதேசத்தில் கஹவ பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் , 'நான் கடந்த 3 வாரங்களாக இலங்கையில் தங்கியுள்ளேன். இங்கு தினந்தோரும் மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. எரிபொருள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நெருக்கடி நிலைமை மேலும் மேலும் அதிகரிப்பதையே அவதானிக்க முடிகிறது.' என்று குறிப்பிட்டு 'கோ ஹோம் கோட்டா' என்று கோஷமளித்தனர்.

வெளிநாடுகளிலும் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

May be an image of 2 people, people standing and fire

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளும் அந்நாடுகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்மைய இன்றைய தினம் இத்தாலி - மிலானோ நகர் , வெரோனா, பேர்கமோ, இங்கிலாந்தின் ஹென்லி, பிரிஸ்டல், கனடா, பிரஸ்பேன் உள்ளிட்ட பல நாடுகளிலும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11