அருண் விஜய் நடிக்கும் ‘ஓ மை டோக்’ பட முன்னோட்டம் வெளியீடு

Published By: Siddeque Kariyapper

11 Apr, 2022 | 05:09 PM
image

நட்சத்திர வாரிசான அருண் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டோக்’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் ‘ஓ மை டோக்’. இதில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜய்குமார், அவரது வாரிசும் நட்சத்திர நடிகருமான அருண் விஜய், அவரது மகனும் குழந்தை நட்சத்திரமுமான அர்னவ் விஜய் ஆகியோர் இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்யா பிரதீப், வினய் ராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல புதிய பாணியிலான படைப்புகளை வழங்கி, தமிழ் திரையுலக ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 2 D எண்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா=ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள்.

 

தமிழ் திரையுலகில் குறிஞ்சிப்பூ போன்று குழந்தைகளுக்கென வெளியாகும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியிருக்கும் ஓ மை டோக் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அமேசான் ப்ரைம் வீடியோ எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. அண்மையில் இப்படத்தின் டீஸர் மற்றும் ஸ்னீக்பிக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. 

முன்னோட்டத்தில் அர்ஜுனாக நடித்திருக்கும் அர்னவ் விஜய்க்கும், சிம்பாவாக நடித்திருக்கும் பார்வையற்ற நாய்க்குட்டிக்கும் இடையேயான பாசப்போராட்டக் காட்சிகள்  ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பதால், கோடைக்காலத்தில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு பாரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி என திரையுலகினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35