ஆட்சிமாற்றம் மட்டுமே நெருக்கடியைத் தீர்க்காது

11 Apr, 2022 | 09:44 AM
image

சி.அ.யோதிலிங்கம்

இலங்கையில் அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் மரபு ரீதியாக நீண்டகாலமாக வளர்ந்து வந்ததொன்றாகும். இதில் பொருளாதார நெருக்கடி அதியுச்சமாக வளர்ச்சியடைந்து பாரிய அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடிகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்ற நிலையே உருவாகியுள்ளது.

Sri Lanka heading towards Political Instability amidst Economic Crisis | The  Financial Express

இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது ஏனைய இனத்தவர்களை வாழ விட்டதே சிங்கள பௌத்தர்களின் பெருந்தன்மை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கருத்து நிலை தான் இனப்பிரச்சினையின் அடிவேராகும். இனப்பிரச்சினையின் வளர்ச்சி நிலை இன அழிப்பாக மாறியது. கட்டமைப்பு சார் இன அழிப்பு ஒரு கட்டத்தின் பின்னர் உயிரழிப்பாக மாற்றம் பெறத்தொடங்கியது தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு தற்போதுரூபவ் முஸ்லிம்களுக்கு எதிராகவும் சிங்களவர் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது.

பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கதவைத் தட்டும் அளவிற்கு இந்த நிலை வளர்ந்துள்ளது.

Church wants Prez to heed public call to step down – The Island

இன்னொரு பக்கத்தில் இந்த இனப்பிரச்சினை புவிசார் அரசியல் போட்டியில் அக்கறை உள்ள வல்லரசுகளின் போட்டிக்களமாகவும் இலங்கையை மாற்றியது. புவிசார் அரசியல்காரரான இந்தியாவும் பூகோள அரசியல்காரர்களான அமெரிக்காரூபவ் சீனாவும் தத்தம் நலன்களில் நின்று கொண்டு இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு போட்டி போடத்தொடங்கியுள்ளன.

Sri Lankan lawmakers seek interim government to solve crisis

அரசியல் நெருக்கடிக்குள் சமாந்தரமாக பொருளாதார நெருக்கடியும் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து வளரத் தொடங்கியது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நிலையற்ற தன்மையைக் கொண்ட விவசாயப் பொருளாதாரத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் கைத்தொழில் துறைக்கு கொடுக்கப்படவில்லை. இது பெரியளவு அந்நியச்செலாவணிக் கையிருப்பு வளர முடியாத நிலையைத் தோற்றுவித்தது.

ஏற்றுமதிகள் குறைவாகவும் இறக்குமதிகள் அதிகமாகவும் நீட்டுகொண்டு சென்றன. இனப்பிரச்சினை காரணமாக 30 வருட ஆயுதப் போர் இடம் பெற்றமையினால் அரசாங்கம் வகை தொகையின்றி கடன்களைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.

கைத்தொழில் துறை வளர்ச்சியடையாமல் கடன்களைப் பெற்றுக் கொண்டமை பொருளாதாரத்தில் பலவீனமான நிலையை உருவாக்கியது. போருக்குப்பின்னர். ஆட்சியமைத்த மஹிந்தராஜபக்ஷ அரசாங்கம் மேலும் மேலும் கடன்களைப் பெற்று பொருளாதார ரீதியாக வருமானங்களைத் தராத துறைகளில் முதலிட்டது.

கடன்களுக்கான நிதிக் கைமாற்றங்களில் பாரிய ஊழல் மோசடிகளும் இடம்பெற்றன. கொரோணா பரவலும் தன் பங்கிற்கு பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்தது. இவை எல்லாம் சேர்த்து மீட்சியே பெற முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்துள்ளதோடு கடலால் சூழப்பட்ட இலங்கை கடனால் சூழப்பட்ட இலங்கையாக மாற்றியுள்ளது. இந்த மீள முடியா பொருளாதார நெருக்கடி மீள முடியா அரசியல் நெருக்கடியையும் தற்போது தோற்றுவித்துள்ளது.

Sri Lanka economic crisis: President Rajapkasa to meet leaders of ally SLFP  today | World News - Hindustan Times

இலங்கையில் சிங்களரூபவ்பௌத்த கருத்து நிலையே அதிகாரத்தில் உள்ளது. இலங்கை அரசின் உருவாக்கம் என்பது சிங்கள பௌத்த கருத்து நிலையை அடித்தளமாகக் கொண்ட ஒன்று தான். இந்த நிலைமை காரணமாக தென்னிலங்கையில் செயற்படும் சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் சிங்கள, பௌத்த கருத்து நிலைக்கு உட்பட்ட கட்சிகளாகவே உள்ளன. அணிகளாகப் பிரித்தால் சிங்கள அரசியலில் இரண்டு அணிகள் மேலாதிக்க நிலையில் உள்ளன. ஒன்று பெரும் தேசிய வாதத்தின் லிபரல் அணி.

மற்றையது பெருந்தேசியவாதத்தின் இனவாத அணி. பெருந்தேசியவாத லிபரல் அணிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன உள்ளடக்கம். பெருந்தேசியவாத இனவாத அணிக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுஜனமுன்னணி, மக்கள் விடுதலை முன்னணிரூபவ் ஹெல உரிமைய என்பன உள்ளடக்கம். இரண்டு அணிகளும் பெருந்தேசியவாத அணிகளாக இருப்பதால் தமிழ் மக்களின் நண்பர்கள் அல்ல.

இரண்டுமே வரலாற்று ரீதியாக இனஅழிப்பை மேற்கொண்டு வருபவை. இனஅழிப்புக்கான அணுகு முறைகளில் மட்டும் வேறுபாடு இருக்கின்றது. ஒரு அணி முதுகில் குத்தும். மற்றைய அணி நெஞ்சில் குத்தும் என்பதே அந்த வேறுபாடு ஆகும்.

இரண்டும் பெருந்தேசியவாதக் கட்சிகளாக இருப்பதனாலும் இன அழிப்பை மேற்கொள்பவையாக இருப்பதனாலும் இக்கட்சிகளின் சார்பு நிலையை தமிழ் மக்களினால் எடுக்க முடியாது. இரண்டு அணிகளில் இருந்தும் சமதூரத்தில் நின்று கொண்டு அவற்றைக் கையாள்வது பற்றியே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். ஒரு அணியின் சார்பு நிலையை எடுத்தால் மறு அணியைக் கையாள்வதும் சிரமமானதாகிவிடும்.

எனவே தென்னிலங்கையின் போராட்டங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் மௌனத்தைக் கடைப்பிடிப்பதே பொருத்தமானதாகும். கோட்பாட்டு ரீதியாக சிங்கள மக்களை ஒரு பகுதியினராவது எமக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் இல்லை. அதற்கான வாய்ப்புக்களையும் தமிழ்த்தரப்பு தேடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

Sri Lanka economic crisis currency economy - Business News

தென்னிலங்கையில் இடம்பெறும் போராட்டங்களுக்குப் பின்னால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் இருக்கின்றது என்ற பார்வையும் உண்டு. தற்போதைய பிரச்சினையில் மேற்குலகத்தின் நிலைப்பாடு ஆட்சி மாற்றமொன்றை உருவாக்குவது தான். தமிழ்த்தரப்பின் பிரச்சினைகளில் எந்தத் தீர்வையும் உறுதிப்படுத்தாத ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. தவிர தமிழ் மக்களினுடைய விவகாரத்தை கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமாயின் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் ஆட்சியில் இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இங்கு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பு ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் தான். எனவே இவர்கள் ஆட்சியில் இருக்கின்ற போதே தமிழ் மக்களுக்கான வலுவான இருப்பை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். தற்போதைக்கு தமிழ் மக்களுக்கான இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை முன்வைப்பதே அதிகம் பொருத்தமானதாக இருக்கும். இந்த இடைக்கால நிர்வாகத்தை ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கொண்டோரூபவ் பாராளுமன்ற சட்ட மூலமோ உருவாக்கலாம்.

இந்த இடைக்கால நிர்வாகம் நான்கு காரணங்களுக்காக தமிழ் மக்களுக்கு தேவையானதாகும். ஒன்று அரசியல் தீர்வும்ரூபவ் மாகாணசபைத் தேர்தலும் தற்போதைக்கு சாத்தியமில்லை. தற்போதைய நெருக்கடியால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டினிச்சாவுக்கும் உள்ளாக நேரிடும். இவற்றைத் தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கென சுயாதீனமான நிர்வாகம் அவசியமானதாகும்.

இரண்டாவது போர் முடிவடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புக்கு பச்சை அணியும் நீல அணியும் விதிவிலக்கானதாக இருக்கவில்லை. இந்த ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான அதிகாரக் கட்டமைப்பு அவசியமாகவுள்ளது.

Sri Lanka's Food Crisis Is the Government's Doing

மூன்றாவது அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் உதவும் நிலையில் இல்லை. நெருக்கடி குறைந்த காலத்தில் உதவாத அரசாங்கம் நெருக்கடி காலத்தில் உதவும் என எதிர்பார்க்க முடியாது. இந் நிலையில் சொந்த முயற்சிகள் மூலமே தமிழ் மக்கள் பொருளாதார ஆதாரங்களை தேட முடியும். இதற்கு முதல் நிலையில் பங்காற்றக்கூடியவர்கள் புலம்பெயர் மக்கள் தான். தமிழ் மக்களுக்கான ஒரு நிர்வாகம் இல்லாமல் புலம்பெயர் மக்கள் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.

நான்காவது தமிழகத்தின் உதவியைப் பெறுவதாகும் இந்த உதவி தமிழக அரசிடமிருந்தும்ரூபவ் தமிழக முதலீட்டாளர்களிடமிருந்தும் பெறக் கூடியதாக இருக்கும். இந்த இரு தரப்பினரும் ஏற்கெனவே தங்கள் விருப்பங்களை தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கென ஒரு நிர்வாகம் இல்லாமல் அவர்களின் பங்களிப்புகளையும் எதிர்பார்க்க முடியாது. தற்போதைய நிலையில் தமிழ்த் தேசிய சக்திகள் ஆற்ற வேண்டிய பணி இடைக்கால நிர்வாகம் தொடர்பான உரையாடலை உடனடியாக ஆரம்பிப்பதுதான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22