பெங்களூரிடமும் மும்பை தோல்வியைத் தழுவியது

Published By: Digital Desk 4

10 Apr, 2022 | 08:00 PM
image

(என்.வீ.ஏ.)

இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை தொடர்ந்து முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸும் 4 ஆவது நேரடி தோல்வியைத் தழுவியது.

Faf du Plessis won the toss and asked MI to bat first

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 8 விக்கெட்களால் சென்னை சுப்பர் கிங்ஸ் தொல்வி அடைந்த சில மணித்தியாலங்களில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம் 7 விக்கெட்ளால் தோல்வி அடைந்தது.

புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அனுஜ் ராவத், முன்னாள் அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகிய இருவரது சிறப்பான துடுப்பாட்டங்களின் உதவியுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் இலகுவாக வெற்றிபெற்றது.

Rohit Sharma got off to a brisk start in the powerplay while Ishan Kishan scored at a run a ball

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றது.

இஷான் கிஷான், அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் தலா 26 ஓட்டங்களைப் பெற்று ஆரம்ப விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

Rohit Sharma fell to an off-cutter from Harshal Patel

ஆனால், 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்களை இழந்த (79-6 விக்.) மும்பை இண்டியன்ஸ் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.

எவ்வாறாயினும், சூரியகுமார் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 40 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை இண்டியன்ஸை ஓரளவு கௌரவமான நிலையை அடையச் செய்தனர்.

Wanindu Hasaranga bagged quick wickets

சூரியகுமார் யாதவ் 37 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 5 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை பெற்றார். ஜெய்தேவ் உனத்கட் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஹர்ஷால் பட்டேல் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Glenn Maxwell made his presence felt by running Tilak Varma out at the non-striker's end

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 50 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான பவ் டு ப்ளெசிஸ் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Suryakumar Yadav led MI's revival with an excellent knock

தொடர்ந்து அனுஜ் ராவத், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

அனுஜ் ராவத் 6 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகளுடன்  66 ஓட்டங்களைப் பெற்றதுடன் விராத் கோஹ்லி 48 ஓட்டங்களைப் பெற்றார்.

Suryakumar Yadav's unbeaten 68 off 37 balls helped MI finish with 151/6

விராத் கோஹ்லி ஆட்டமிழந்த போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு 11 பந்துகளில் 8 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது.

க்ளென் மெக்ஸ்வெல் தான் எதிர்கொண்ட முதல் 2 பந்துகளிலும் பவுண்ட்றிகளை விளாசி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரின் வெற்றயை உறுதிசெய்தார். தினேஷ் கார்த்திக் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Anuj Rawat and Faf du Plessis were involved in a half-century stand, although it took them until the 8th over to reach 50Jaydev Unadkat ended the opening stand with the wicket of Faf du PlessisAnuj Rawat played some impressive shots en route his maiden IPL fiftyVirat Kohli also dealt in regular boundaries to be involved in a half-century stand with Anuj RawatDewald Brevis bagged a wicket off his first ball in the IPL, with Virat Kohli being dismissed for 48Glenn Maxwell started his IPL campaign with back-to-back fours off Dewald Brevis as RCB registered their third win in four games

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20