உக்ரேனிய நெருக்கடியில் ஐ.நா.வின் பாரபட்சம்

10 Apr, 2022 | 08:35 AM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

போர் என்பது கலையெனில்ரூபவ் அதில் மிகச் சிறப்பானது எது தெரியுமா? போரிடாமல் எதிரியை மண்டியிடச் செய்வது தான். இது சீன மெய்யிலாளர் சுன் த்ஷிவின் பொன்மொழி.

இந்தப் பொன்மொழி உக்ரேனிய யுத்தத்திற்கு பொருந்திப் போகிறது. யார், யாரை மண்டியிடச் செய்வது? ரஷ்யா உக்ரேனையா? அல்லது உக்ரேன் ரஷ்யாவையா? அது தான் இல்லை. இராஜதந்திர அரங்கில், போரிடாமல் ரஷ்யாவை மண்டியிடச் செய்யும் அமெரிக்காவின் எத்தனிப்பின் மற்றொரு அத்தியாயம் கடந்த வாரம் அரங்கேறியிருக்கிறது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றுவதற்கான பொதுச்சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பிரகாரம், மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா இடைநிறுத்தப்படும்.

வாக்கெடுப்பிற்கான பிரேரணையை தாக்கல் செய்தது வேறு யாருமல்ல. அமெரிக்கா தான். மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறி, அந்தப் பேரவையை அங்கீகரிக்காத நாடு. இன்று பேரவையில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து வாக்களித்திருக்கிறது.

அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகள். 58 நாடுகள் வாக்களிக்கவில்லை. 24 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன. 2011ஆம் ஆண்டு லிபியாவிற்குப் பின்னர், மனித உரிமைகள் பேரவையில் இருந்து இடைநிறுத்தப்படும் முதல் நாடு ரஷ்யா என்பதொரு விடயம்.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் பெற்ற நாடொன்று பேரவையில் இருந்து வெளியேற்றப்படும் முதல் சந்தர்ப்பம் என்பது மற்றைய முக்கியமான விடயமகும். ரஷ்யாவை ஏன் வெளியேற்ற வேண்டும்? ஒட்டுமொத்தமாகவும்ரூபவ் திட்டமிட்ட வகையிலும் மனித உரிமைகளை மீறியதால், பேரவையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்படுவது அவசியம் என்பது பதில்.

ஐ.நா.சபையின் ஊடாக உருவாக்க முனையும் உலக ஒழுங்கை மீறி, ஈராக்கையும்  ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்த அமெரிக்கா ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துவிட்டு ரஷ்யா விவகாரத்தில் வேதம் ஓதுகிறது.

உக்ரேனிய ரஷ்ய போர்க்களத்தில் நிகழ்வதாகக் கூறப்படும் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்கா கூறலாம். அவை நிரூயஅp;பிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், நேரடி ஆக்கிரமிப்பில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கப் படைகள் கட்டவிழ்த்து விட்ட மறுதலிக்க முடியாத அக்கிரமங்களை விடவுமா, அவை மோசமானவை?

உக்ரேனிய - ரஷ்ய ஆயுத மோதலுக்கு நேரடி காரணம் எதுவாகவும் இருக்கலாம் என்று பார்க்கையில், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விஸ்தரிப்பில் உக்ரேனை ரஷ்யாவிற்கு எதிராக தூண்டி விட்ட மேற்குலகின் முயற்சிகள் தானே, மறைமுகக் காரணம்?

இந்த முயற்சியுடன் நின்று விடவில்லை. கடந்த மாதம் பொதுச் சபையில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 141 வாக்குகளும், எதிராக ஐந்து வாக்குகளும் செலுத்தப்பட்டன. மொத்தமாக 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்துவது தான் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் நோக்கம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த நோக்கத்தை அடைவதற்காக அனுசரித்த எதுவித தந்திரோபாயமும் ஐக்கிய நாடுகள் என்ற கட்டமைப்பின் ஏற்றுக் கொள்ளப்பட்ட தாற்பரியங்களுக்கு உட்பட்டவை அல்ல.

அடுத்ததாக, ரஷ்யாவை தனிமைப்படுத்துவதன் மூலம் நெருக்கடி தணியப் போவதில்லை. தீர்வு கிட்டப் போவதில்லை. மாறாக, நெருக்கடி தீவிரம் பெறும். ரஷ்யாவிற்கு எதிரான பிரேரணை மிக அவசரமாக தயாரிக்கப்பட்டதாகவும் இதில் வெளிப்படைத் தன்மை இருக்கவில்லை எனவும் சீனா குற்றம் சாட்டுகிறது.

ஐ.நா.பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக சாட்சி சொல்லவும் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் உக்ரேனிய அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்க்கியிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில், ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டிற்கு எதிராக பாதுகாப்புச் சபையில் பேச வேண்டுமாயின், அந்தச் சபையில் நேரடியாக பேசுவது அவசியம்.

எனினும், பாதுகாப்புச் சபையின் தலைமைப் பதவி சமகாலத்தில் பிரித்தானியாவிடம் உள்ளதால்ரூபவ் ஸெலன்ஸ்க்கி காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அகண்டதொரு திரையில் தோன்றி ரஷ்யாவைப் பற்றி கடும் விமர்சனத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தவிரவும், ரஷ்யப் படைகள் புச்சா என்ற நகரில் கட்டவிழ்த்து விட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி வீடியோ காட்சிகளை ஒளிபரப்பவும் அனுமதி அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு சபை என்பது உலகப் பொதுமேடை என்றால்ரூபவ் பக்க சார்பாக செயற்படும் தலைமைத்துவ பதவியை துஷ்பிரயோகம் செய்துரூபவ் ஒரு தரப்பிற்கு மாத்திரம் வாய்ப்பளிப்பது எவ்வாறு? அதிலுள்ள நியாயம் என்ன?

இதுவே அமெரிக்கா தலைமையிலான மேலைத்தேய நாடுகள் மேற்கொள்ளும் பிரசார யுத்தத்தின் வெளித்தெரியாத முகம்.

அடுத்ததாக, மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றும் தீர்மானத்தின் ஊடாக கூடுதலான நாடுகளைத் தம்பக்கம் ஈர்த்துக் கொள்வதே அமெரிக்கா தலைமையிலான மேலைத்தேய நாடுகளின் நோக்கம்.

இந்த முயற்சியின் மூலம் உலக நாடுகள் மென்மேலும் பிளவுபட்டால் அவை கவலைப்படப் போவதில்லை. வாக்கெடுப்பின் எதிரொலியாக, ரஷ்யாவில் தங்கியிருக்கும் நாடுகளுக்கு என்ன நடந்தாலும் அவற்றிற்கு அக்கறை கிடையாது.

மனித உரிமைப் பேரவையில் தமக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படப் போகிறது என்பதை ரஷ்ய அரசாங்கம் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தது. இதற்கு ஆதரவாக வாக்களித்தால் விளைவுகள் மோசமானமாவையாக இருக்கும் என்ற எச்சரிக்கையுடன், பல நாடுகளுக்கு கடிதங்களையும் அனுப்பி வைத்திருந்தது.

இந்த விளைவுகள் பற்றி மேலைத்தேய நாடுகளுக்கு அக்கறை கிடையாது. அவற்றின் தேவையெல்லாம் போரின்றி ரஷ்யாவை மண்டியிடச் செய்வது தான். பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல.

இதைத் தான், பிரேரணை மீதான வாக்களிப்பைத் தவிர்த்த மெக்சிக்கோவின் தூதுவர் தெளிவாக எடுத்துரைத்தார். இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வுகாண வேண்டுமாயின், ஒரு அங்கத்துவ நாட்டை இடைநிறுத்துவதோ, வெளியேற்றுவதோ தீர்வாக மாட்டாது. யுத்தத்தின் மத்தியிலேனும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சகல மார்க்கங்களையும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்று தூதுவர் ஜூவான் ரமொன் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் பேரவை என்பது அதில் அங்கம் வகிக்காத அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றும் அமைப்பாகவே செயற்படுகிறது என்பது தெளிவாகத் தெரியும் உண்மை.

அமெரிக்கா தலைமையிலான மேலைத்தேய சமூகம் என்ன நினைக்கிறதோ, அதுவே நிறைவேறக் கூடிய போக்கைக் காணக்கூடியதாக இருக்கிறது.

2011ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவை லிபியாவை இடைநிறுத்த வேண்டும் என்று யோசனை கூறியபோது, வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கவில்லை. இதன்போது, லிபிய மண்ணில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றி கரிசனை வெளியிட்டாலும், மனித உரிமைகள் பேரவை அரசியல்மயமாக்கப்பட்ட தீர்மானத்தை எடுக்கக் கூடாது என இந்தியா வலியுறுத்தியதை ஞாபகப்படுத்தலாம்.

இதையே இப்போதும் கூற வேண்டியிருக்கிறது. மனித உரிமைகள் பேரவை உலகப் பொது அமைப்பென்றால், அது எல்லா சந்தர்ப்பங்களையும் சமமாக அணுக வேண்டும். அப்போது தான், அதன் மீதான நம்பிக்கை வலுப்படும். மனித உரிமைகள் பற்றிய அக்கறையை அரசியல் நோக்கங்களுக்காகவும் சந்தர்ப்பவாதத்திற்காகவும் காவு கொடுத்து விடக் கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22