கொட்டும் மழையிலும் தொடரும் அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சிப் போராட்டம் ! வீதியில் நோன்பு திறப்பு !

09 Apr, 2022 | 08:14 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் , நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து நாடளாவிய ரீதியில் கடந்த இரு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

Image

ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , தற்போது , மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காலி முகத்திடலில் திரண்ட இளைஞர் , யுவதிகள்

Image

அதற்கமைய இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் கொழும்பு - காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Image

 'பக்க சார்பற்ற மக்கள் போராட்டம்' என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் குறித்த வீதியூடாக பயணித்த வாகனங்கள் ஒலியெழுப்பி (ஹோர்ன்) சென்றன.

Image

அமைப்புக்கள் அல்லது சங்கங்கள் என எவையும் இன்றி இளைஞர் , யுவதிகளால் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

Image

இதன் காரணமாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் பல பிரதான வீதிகளில் பொலிஸாரினால் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 

அத்தோடு தநைகர் கொழும்பில் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

காலை முதல் மாலை 3 மணி வரை காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தவர்கள் , பின்னர் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குச் சென்று அங்கு தமது எதிர்ப்பு கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். 

இதன் போது செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு பொலிஸாரார் தடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை தகர்ப்பதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முயற்சித்தனர். 

இதனால் அங்கு அமைதியற்ற நிலைமையும் ஏற்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் வைக்கப்பட்டிருந்த காவலரண் மீது ஏறி பாதாதைகளை ஏந்தி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

பேராயர் தலைமையில் நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைக் கோரியும் , நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வினை வலியுறுத்தியும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

நீர்கொழும்பு கிரீன்பார்க் சந்தியில் - நீர்கொழும்பு கத்தோலிக்க சபையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சிலாபம் , நீர்கொழும்பு, கிரீன்பார்க் வீதி உள்ளிட்டவற்றில் வாகன போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது.

'நீதிக்காக'  - கட்டுவாப்பிட்டிய பேரணி

Image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைக் கோரியும் , நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு துரித தீர்வினை வலியுறுத்தியும் கத்தோலிக்க மக்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களினால் 'நீதிக்காக' என்ற தொனிப்பொருளில் அமைதி வழி பேரணியொன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. 

இதனை ஏற்பாடு செய்திருந்தவர்கள் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திலிருந்து , கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் வரை பேரணியாகச் சென்றனர்.

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இந்த எதிர்ப்பு பேரணி இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமானது. இவ்வாறு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் ஆரம்பமான எதிர்ப்பு பேரணி , கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியன் தேவாலயம் , கட்டுநாயக்க தேவாலயம் , துடெல்ல அடக்கல மாதா தேவாலயம் , கந்தானை - ஹெந்தல சந்தி, எலகந்த வழியூடாக கொச்சிக்கடை தேவாலயம் வரை சென்றது.

அச்சுத்துறையினர் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியால் அச்சுத்துறைக்கு தேவையான கடதாசி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால் , தாமும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்து அச்சுத்துறை சார்ந்தவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை, வீதியின் இருந்தவாறு நோன்பு திறக்கும் சமயக் கடமையிலும் ஈடுபட்டனர்.

Image

Image

Image

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும் அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:57:56
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04