பண வைப்புவீதம், கடன் வழங்கல் வீதம் அதிகரிப்பு - மத்திய வங்கி

Published By: Digital Desk 5

09 Apr, 2022 | 07:15 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரம் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் மீட்சிக்கான செயற்திட்டங்களில் ஒன்றாக மத்திய வங்கியின் வைப்பு வசதி வீதத்தை 13.50 %சதவீதமாகவும் கடன்வழங்கல் வசதி வீதத்தை 14.50 %சதவீதமாகவும் உயர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பதவி விலகலை அடுத்து,  வெள்ளிக்கிழமை[08.04.2022] மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் நடைபெற்ற நாணயச்சபைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (9 ) மாலை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதிலேயே மேற்குறிப்பிட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தளர்த்தப்பட்ட நாணயக்‌ கொள்கை நிலையைத் தொடர இலங்கை மத்திய வங்கி தீர்மானம்! |  Virakesari.lk

நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாணயச்சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைவரம் குறித்த விபரங்கள் வருமாறு:

மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் என்பவற்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் 700 அடிப்படைப்புள்ளிகளால் முறையே 13.50 %மற்றும் 14.50 %சதவீதமாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டுக்கேள்வி உயர்வு, நிரம்பலுக்கான உள்நாட்டுத்தடைகள், செலாவணிவீதத்தேய்மானம் மற்றும் உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் பொருட்களின் விலைகள் ஆகிய காரணங்களினால் எதிர்வருங்காலங்களில் உள்நாட்டில் பணவீக்க அழுத்தங்கள் மேலும் கடுமையடையக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டு, பொருளாதாரத்தில் மேலதிக கேள்வித்தூண்டல் பணவீக்க அழுத்தங்கள் உருவாவதை இல்லாதொழிப்பதற்கும் மோசமான பணவீக்க எதிர்பார்ப்புக்கள் உயர்வடைவதை முன்கூட்டியே தடுப்பதற்கும் செலாவணி வீதத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் உத்வேகத்தை வழங்குவதற்கும் வட்டிவீதங்களில் அவதானிக்கப்பட்ட ஒழுங்கீனங்களைத் திருத்தியமைப்பதற்கும் இந்த மாற்றம் அவசியமானது என மத்திய வங்கி கருதுகின்றது.

பல மாதங்களால ஏற்றுமதித்துறை மூலமான வருமானம் தொடர்ச்சியான உத்வேகத்தைக் காண்பித்து, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியிருக்கின்றபோதிலும், இறக்குமதிகள் மீதான உயர்ந்த மட்டத்திலான செலவினங்கள் வர்த்தகப்பற்றாக்குறை தொடர்ந்தும் விரிவடைவதற்கு வழிவகுத்திருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளின் வருகை வலுவான மீட்சியைக் காண்பித்தபோதிலும, பூகோள அரசியல் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டுப்பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை என்பன, வலுசக்திப்பற்றாக்குறை, பொருட்களின் வழங்கள்மீது காணப்படும் தடைகள் என்பன இந்த மீட்சியின்மீது ஓரளவு சுமையைத் தோற்றுவித்திருக்கின்றன. தொழிலாளர் பணவனுப்பல்கள் செலாவணி வீதத்திற்குச் செய்யப்பட்ட சீராக்கம் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்வில் ஏற்பட்ட தொடர்ச்சியான அதிகரிப்பு என்பன பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பித்தன.

செலாவணி வீதத்தைத் தீர்மானிப்பதில் பெருமளவிற்கு சந்தை சார்ந்த தன்மைகள் காணப்பட்டதன் காரணமாக, இவ்வாண்டில் தற்போதுவரை அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியானது 33% சதவீத தேய்வைப் பதிவுசெய்துள்ளது. ஆனால் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களில் காணப்பட்ட மந்தகரமான செயலாற்றத்திற்கு மத்தியில் செலாவணி வீதம் கடுமையாகத் தேய்வடைந்தமையானது கொள்கை ரீதியில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியத்தைத் தோற்றுவித்தது என்று மத்திய தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18