புத்தாண்டில் மின் துண்டிப்பு இல்லை - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

Published By: Siddeque Kariyapper

09 Apr, 2022 | 01:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டாது. எதிர்வரும் வாரம் முதல் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் காலத்தை குறைந்தப்பட்ச அளவில் மட்டுப்படுத்தப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த ஓரிரு மாதங்களை காட்டிலும் தற்போது மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பனவில் சாதகமான தன்மை காணப்படுவதால் எதிர்வரும் வாரம் முதல் மின்விநியோக தடையினை இயலுமான அளவு மட்டுப்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டு;ள்ளது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் டீசல் தொகை கிடைத்துள்ளதுடன்,கொள்வனவு செய்த எரிபொருளும் தற்போது தரையிறக்கப்பட்டுள்ளதால் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பனவில் சாதகமான சூழல் நிலவுகிறது.

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் அதாவது 13,14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படமாட்டாது.அத்துடன் நாளைய தினம் காலை 8.30 மணிமுதல் மாலை 05.30 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,மாலை 05.30 மணிமுதல் இரவு 10.45 மணித்தியாலங்கள் வரையான காலப்பகுதியில் 1.மணித்தியாலமும்,45 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.

அத்துடன் நாளை மறுதினம் 4 மணித்தியாலங்களும்,எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலை  9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும்,15 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் எதிர்வரும் காலப்பகுதிகளில் மின்விநியோக தடையை முழுமையாக நீக்கிக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06