சைவ மங்கையர் வித்தியாலய மாணவத் தலைவிகள் - 2020 ஒன்றியத்தின் உதவும் கரங்கள் “நம்பிக்கை (Hope)”

09 Apr, 2022 | 12:46 PM
image

சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்கில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு, 90 வருடப் பாரம்பரியத்துடன் மாண்புறு மகளிரை தமிழ்ச் சமூகத்தில் தோற்றுவித்த  சீரிய பாடசாலையே கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர்  வித்தியாலயம். 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொழும்பு சைவ மங்கையர்  கழகத்தினால் பெண் கல்வியை மேம்படுத்த இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல துறைகளில் தேர்ச்சி பெற்ற சமூக விழிப்புணர்வும் கலாச்சாரச் சிறப்பும் கொண்ட  பெண்களை உருவாக்கியிருக்கிறது இப்பாடசாலை. 

அறிவு, திறன், மனப்பாங்கு எனும் மூன்றையும் வளர்த்தெடுக்கும் பாடசாலையின் பணியில் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியது மாணவத் தலைவியருக்கான பயிற்சியும் அவர்களால் வழங்கப்படும் சேவையும் ஆகும். சமூகத் தலைமைத்துவத்திற்கான முதல் படியாக மாணவத் தலைவியரின் செயற்பாடுகள் அமைகின்றன. பாடசாலை ஒழுங்கு நடைமுறைகளைப் பேணுவதோடு மட்டுமன்றி ஆண்டு தோறும் மாணவத் தலைவிகள் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றுவதோடு சமூகப் பணிகளிலும் கவனஞ் செலுத்தி வந்திருக்கின்றார்கள். 

அந்தச் சுவடுகளின் வரிசையில் மாணவத் தலைவிகள் 2020 ஒன்றியத்தினர் சமூகம் சார்ந்த நற்பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவத்தைத் தமது மாணவத் தலைமைப் பருவம் முழுவதிலும் கொடுத்து வந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஒன்றியத்தின் தலைமை மாணவத் தலைவியாக செல்வி நீலாயதக்ஷி பிரியதக்ஷன், விளையாட்டுக்கான மாணவத் தலைவியாக  செல்வி லேசான்யா கிருஷ்ணபிள்ளை, மாணவர் தலைவியர் குழாமின் தலைவியாக செல்வி பாரதி குணரட்ணம் ஆகியோர் செயற்பட்டு தமது பாடசாலைக்குரிய மற்றும் சமூகத்திற்குரிய பணிகளை மிகச் சிறப்பாக ஆற்றியுள்ளார்கள். இவர்களுடன் பிரதித் தலைமை மாணவத் தலைவியாக செல்வி விகஷா இராஜமனோகரன், விளையாட்டுக்கான பிரதி மாணவத் தலைவியாக செல்வி டில்ஷிகா சிவகுமார் ஆகியோரும் கை கோர்த்திருக்கின்றார்கள். 

2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தாக்கம் நாடளாவிய ரீதியில் காணப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும் கூட பாடசாலை மீண்டும் ஆரம்பித்து குறுகிய காலத்தினுள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட, தமது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான உதவிக்கரமாக  “சாயை” (நிழல்) எனும் பெயரில் தமது சமூகப் பணியினை முன்னெடுத்தார்கள். தன்னலமற்ற சமூக சேவையில் தமது முதல் அடியை எடுத்து வைத்தனர் 

இம் மாணவத் தலைவிகளின் “சாயை (நிழல்) – நீங்கள் ஏற்படுத்தக்கூடிய மாற்றம்” (“Saayai – The Difference You Can Make”) செயற்திட்டத்தின் கீழ் சமூக சேவை,  புகைப்பட சங்கம் உருவாக்கம், தமது பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை புகைப்பட போட்டி மற்றும் ஏனைய பாடசாலை மாணவர் மாணவத் தலைவர்களிடையே நிகழ்நிலை காணொளிப் போட்டி என்பன மேற்கொள்ளப்பட்டன. 

இம் மாணவர்கள் வவுனியா இல்லத்தில் வாழும் ஆதரவற்றோர், புற்றுநோயாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கி உதவிக் கரம் நீட்டியதோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாகவும் பொருட்களைக் கொடுத்து தமது உதவிகளை வழங்கினர்.

இதனை தொடந்து இம் மாணவத் தலைவிகள் தமது பாடசாலையில் முதன்முதலாக புகைப்படக் கழகம் (Photography Club)  ஒன்றை நிறுவினர். 

இம் மாணவர்களால் நிறுவப்பட்ட புகைப்படக் கழகம்; பாடசாலை நிகழ்வுகளைப் படம் பிடித்ததுடன் நிகழ்நிலை புகைப்படப் போட்டியும் நடாத்தப்பட்டது. புகைப்படக் கழகம்; மூலம் திறமைகளை இணங்காணும் வகையில் தம் பாடசாலை மாணியவர்களுக்கிடையே புகைப்பட போட்டியை நடாத்தினர். இப் போட்டியில் வெள்ளவத்தை சைவ மங்கையர் மாணவிகள் பங்குபற்றியதுடன்  அவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் வெற்றி பெற்றவர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். 

இதனைத் தொடர்ந்து, புகைப்படக் கழகத்தினால் அகில இலங்கை ரீதியாக உள்ள பாடசாலை மாணவத் தலைவர்களிடையே நிகழ்நிலை மூலமான காணொளிப் போட்டிகள், “உயிர்களுக்கான சம  உரிமை, அரசியலில் இளம் தலைமுறையினர், வாக்களிப்பதற்கான உரிமை, பதின்மப் பருவ மன அழுத்தங்கள் மற்றும் கோவிட் 19 இன் தாக்கங்கள்” போன்ற சமூகம் சார்ந்த தலைப்புக்களில்;  சிறப்புற நடாத்தப்பட்டது. 

இம் மாணவத் தலைவிகளின் “சாயை (நிழல்)” எனும் செயற்திட்டம் பலருக்கு நிழல் தந்து உதவியதோடு  “சாயை” எனும் அத்தியாயத்தின் முடிவானது “நம்பிக்கை: தேவை உள்ளவர்களுக்காக” (“Saayai – The Difference You Can Make”) எனும் சமூக சேவைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய அத்தியாயத்திற்கான ஆரம்பமாய் அமைந்தது. 

நம்பிக்கை எனும் செயற்திட்டத்தின் கீழ்  வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவத் தலைவிகள் - 2020  ஒன்றியத்தினரின்  சமூக சேவை வேலைத் திட்டங்கள் மார்ச் 2022 இல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இச் சமூக சேவை வேலைத் திட்டத்தின் கீழ்    பாதிக்கப்பட்ட மற்றும் விஷேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.   

அந்த வகையில் நம்பிக்கை (HOPE) எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், கொழும்பு, தெகிவளையில் அமைந்துள்ள “மித் செவன” (Mith Sevena) எனப்படும் விஷேட தேவையுடைய  குழந்தைகளுக்கான அரசாங்கப் புனர்வாழ்வு  நிலையம் மற்றும் யாழ்ப்பாணம்,  ஸ்ரீ பரமானந்தா சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப அத்தியாவசியப்  பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

“மித் செவன” (Mith Sevena) எனப்படும் விஷேட தேவையுடைய குழந்தைகளுக்கான அரசாங்கப் புனர்வாழ்வு  நிலையம், பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட விஷேட  தேவைகளையுடைய குழந்தைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் மற்றும் புனர்வாழ்வு  மூலம் குழந்தைகளை தன்னிறைவு அடையச் செய்யும் இல்லமாகச் செயற்படுகின்றது. இந்த இல்லம் விஷேட  தேவைகளையுடைய குழந்தைகளின் வளர்ச்சிக்கான சிறப்புக் கல்வித் திட்டங்கள் மற்றும் தையல் வகுப்புகள், கைவேலை வகுப்புகள் போன்ற தொழில் பயிற்சிகளை வழங்குகின்றது. 

“மித் செவன” இல்லத்தில் விஷேட தேவைகளையுடைய எழுபத்திரண்டு (72) குழந்தைகள் தங்கியுள்ளார்கள். 

பெண்கள் பாடசாலையாக, விஷேட தேவையுடைய பெண் குழந்தைகளுக்கான அரசாங்கப் புனர்வாழ்வு  நிலையமான “மித் செவன”வைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களின் உணவு மற்றும் மருந்துகளைப் பாதுகாப்பதற்காக குளிர்சாதனப்பெட்டி, இரண்டு பெரிய அளவிலான அலமாரிகள் உட்பட மொத்தமாக ரூபா 300,000/=  பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சுவாமி பரமானந்தாவால் நிறுவப்பட்ட, ஸ்ரீ பரமானந்தா குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம்ஓர் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கரவெட்டி, வதிரியில் அமைந்துள்ளது. தற்போது, இந்த இல்லத்தில் 40 பெண் குழந்தைகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் ஆதரவற்ற குழந்தைகளாக உள்ளனர். இந்த இல்லமும் பெண் குழந்தைகளுக்கான  இல்லமாகும். பெண் குழந்தைகளைத் தவிர, ஆதரவான பராமரிப்பாளர்கள் இல்லாத   14 முதியோர்களும் இல்லத்தில் தங்கியுள்ளனர். இல்ல நிர்வாகத்தினரின் கோரிக்கைக்கு அமைய பத்து அலுமாரிகள் மற்றும் பத்து மெத்தைகள் மொத்தமாக ரூபா 2200,000/=  பெறுமதியான  அத்தியாவசியப் பொருட்களை மாணவத்; தலைவிகள் வழங்கியுள்ளனர். 


பாடசாலை மாணவத் தலைவிகளாக இருந்த பொழுதிலும் சமூகத்தின், குறிப்பாக பெண் குழந்தைகளின்  தேவையறிந்து அதனை நிறைவேற்றுவதற்கு தமது தலைமைத்துவத்துடன் இந்த இளம் தலைமுறை மாணவத் தலைவிகள் முன் வந்தமை பாராட்டத்தக்கது. இவர்களது சமூக சேவைப் பணிகளை முன்னிறுத்தி நம்பிக்கை (ர்ழுPநு) எனும் பெயரில் வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலத்தின் மாணவத் தலைவிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட மாணவத் தலைவிகள் தினம் மற்றும் சமூக சேவை ஒன்றுகூடல் நிகழ்வு 2022 ஏப்ரல் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தேசிய கிறிக்கற் அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம்  மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விடயங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை கலந்து கொண்டார். இவர்களுடன் சைவ மங்கையர் கழகத்தின்  முகாமையாளர் செல்வி மாலா சபாரத்தினம் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், ஏனைய பாடசாலைகளின் மாணவத்தலைவர்கள் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து மாணவத் தலைவியர்களின் மனதை கவரும் வரவேற்பு நடனமும் அரங்கேறியது. நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக  மாணவத் தலைவியர்களின் உரை, அதிபர் உரை, பிரதம அதிதி உரை, முகாமையாளர் உரை, கௌரவ அதிதி உரை என்பன இடம்பெற்றன. குறிப்பாக மாணவத் தலைவியர்களின்  தலைமைத்துவம் மற்றும் ஒழுக்கம் தொடர்பிலும் அத்துடன் கல்வி, விளையாட்டு மற்றும் சமூக சேவை தொடர்பிலும்; பிரதம அதிதி திரு அரவிந்த டி சில்வா ஆற்றிய சிறப்புரை அனைவரின்  மனதையும் கவர்ந்தது. தோல்விகளிலிருந்து பாடம் கற்று வெற்றியை நோக்கி முன்னேறுதல் பற்றிய அவரது அனுபவப் பகிர்வுகள் மாணவத்தலைவர்கள் அனைவருக்கும் சிறந்த ஊக்குவிப்பாக  அமைந்தது.

கௌரவ அதிதி திருமதி ரஞ்ஜினி நடராஜபிள்ளை தனது உரையில் மாணவத் தலைவிகளின் சமூக சேவைப் பணிகளுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு இளம் வயதில் இத்தகைய  சமூக சேவைப் பணிகள் மாணவத் தலைவிகளின் சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவதோடு அவர்களை சிறந்த பிரஜைகளாக உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார். 

மாணவத் தலைவிகளின் சமூக நல உதவித் திட்டங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடகடகியதாக, மாணவத் தலைவிகள் தினம் மற்றும் சமூக சேவை ஒன்றுகூடல் நிகழ்வு  தினத்திற்கான  நினைவுச் சஞ்சிகை “Hope: for the ones in need”  என்ற பெயரில் வெளியிடப்பட்டது நிகழ்வின் சிறப்பம்சமாகும். அத்தோடு “சாயை” மற்றும் “நம்பிக்கை”  எனும் செயற்திட்டங்கள்;  தொடர்பான அறிக்கை சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து  சபைக்கு சமர்ப்பிக்கப்;பட்டது. புகைப்படப் போட்டி மற்றும் ஏனைய பாடசாலைகளுக்கிடையே நடாத்திய சமூக நாடகங்கள்,  காணொளி போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் அன்றைய நிகழ்வில் பிரதம அதிதியான திரு அரவிந்த டி சில்வா அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இறுதியாக இந் நிகழ்வானது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடனும், இறை ஆசியுடனும் இனிதே நிறைவேறியது. 

சைவ மங்கையர் வித்தியாலய மாணவத் தலைவிகள் - 2020 ஒன்றியத்தின் இப் பெறுமதி மிக்க பயணத்திற்கு வழித்துணையாகக் கல்லூரி அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் அவர்களும் பொறுப்பாசிரியர்கள் திருமதி இராசமணி சடகோபன் மற்றும் திருமதி சுரனுதா ஜெயரூபன் ஆகியோரும் துணை நின்றனர். அத்தோடு, வழிகாட்டியாக சைவ மங்கையர் கழகத்தி;ன் முன்னாள் முகாமையாளர் திருமதி சிவானந்தினி துரைசாமி செயற்பட்டார். இவர்களின் துணையோடும் இறைவனின் ஆசியோடும் சைவ மங்கையர் வித்தியாலய மாணவத் தலைவிகள் - 2020 ஒன்றியத்தினர் மேலும் பல மைல் கற்;களைக் கடப்பர் என்பது உறுதி.  

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22