பொருளாதார நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்தியவர்களுக்கு தண்டனை வழங்குதல் அவசியம் - ரணில்

Published By: Digital Desk 3

08 Apr, 2022 | 11:13 PM
image

(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நெருக்கடியினை வேண்டுமென்றே தீவிரப்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினருக்கு பாராளுமன்ற மட்டத்தின் ஊடாக நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும். 

குறுகிய காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டமை குறித்து ஆராய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபித்தல் அவசியமாகும். 

அரச நிதி விவகாரத்தில் அரசாங்கமும் அமைச்சரவையும் முழுமையாக தோல்வியடைந்துள்ளதால் அரச நிதி தொடர்பான அதிகாரம் மீண்டும்  பாராளுமன்றிற்கு பொறுப்பாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் வலியுறுத்தினார்.

பராளுமன்றில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற  சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை  தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தின் போது விசேட உரையாற்றுகையின் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றகையில் ,

பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்து நாட்டின் ஸ்தீரத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அரச நிதி விவகாரம் தொடர்பில் அரசாங்கமும், அமைச்சரவையும் தோல்வியடைந்துள்ளது. அரச நிதி விவகாரம் தொடர்பான அரமைப்பின் 148 ஆவது பிரிவிற்கமைய  நிதி தொடர்பிலான அமைச்சரவையின் அதிகாரம் மீண்டும் பாராளுமன்றிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

அரச நிதி தவறான தீர்மானங்களினால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதை பல்வேறு காரணிகள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.பொருளாதாரம் தொடர்பிலான அமைச்சரவையின் தவறான திட்டங்கள் பொருளாதார நெருக்கடியை வலுப்படுத்தியுள்ளது. 

பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்திற்குள் தீவிரப்படுத்தி நாட்டையும், நாட்டு மக்களையும்  நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள தரப்பினருக்கு தண்டனை வழங்குவது அவசியமாகும். பொருளாதார நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்திய தரப்பினர் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பது அவசியமாகும்.

இலங்கையின் கடன் நிலைமை நிலைப்பேறான தன்மையில் இல்லை. பொருளாதார நெருக்கடி தீவிரமடைகிறது என சர்வதேச நாணய நிதியம் இடைக்கால அறிக்கை ஊடாக அறிவித்த போதும், அதனை பொருட்படுத்தாமல் செயற்பட்ட தரப்பினருக்கு எதிராகவும் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை காலதாமதப்படுத்தியவர்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் தற்போது அத்தியாவசிய சேவைகள் கிடைப்பனவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுகிறது. இந்திய கடனுதவி திட்டம் கிடைக்கப்பெறாவிடின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? நடைமுறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டுமாயின்  ஒரே தடவையில் நாட்டிற்கு 4 எண்ணெய் கப்பல்கள் வருகை தர வேண்டும்.

மறுபுறம் உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சார்க் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடம் நிவாரண அடிப்படையில் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அரசாங்கம் நல்லுறவின் அடிப்படையில்  இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்விநியோக  கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள், அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகள் மக்களின் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. 

உலக  வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உதவிகளை பெற்று மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு காண முடியும்.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு துரிதகரமான தீர்வு காணாவிடின் அரசியல்வாதிகள் சித்திரை புத்தாண்டுக்கு தங்களின் சொந்த இடங்களுக்கு  கூட செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08