அரசாங்கத்தில் அமைச்சர்கள் இருக்கின்றார்களா ? இல்லையா ? - சமிந்த விஜேசிறி

Published By: Digital Desk 3

08 Apr, 2022 | 11:14 PM
image

(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? பதவி விலகியிருந்தால் அமைச்சு வாகனங்களை எப்படி பயன்படுத்த முடியுமென்பது தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (8) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  தலைமையில் கூடிய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சமிந்த விஜேசிறி ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி, அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர்  பொய் கூறுகின்றார். அமைச்சர்கள் பதவி விலகினார்களா இல்லையா என்பது தொடர்பில் சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

இதனையடுத்து எழுந்த மரிக்கார் எம்.பி.ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி, அமைச்சர்கள் பதவி விலகியிருந்தால் எப்படி அமைச்சு வாகனங்களில் வர முடியும்? அமைச்சு வீடுகளில் எப்படி தொடர்ந்தும் தங்கியிருக்க முடியும்? அமைச்சர் பதவியிலிருந்து விலகினால் அவரது உத்தியோகஸ்தர்களும் விலக வேண்டும். 

ஆனால் அப்படி யாரும் விலகவில்லை. அத்துடன் இந்த சபையில் கூட அமைச்சர்களுக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் தான் இப்போதும் அவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அமைச்சர்கள் உண்மையில் பதவி விலகியிருந்தால் அதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

இதுதொடர்பில் அரச தரப்பு எம்.பி. யான காஞ்சன விஜேசேகர கூறுகையில், புதிய அமைச்சரவை அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளது என்றார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இந்த ஒழுங்குப்பிரச்சினைகள் தொடர்பில் அரச தரப்பு  பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்சன் பெர்னாண்டோ கூறுகையில், 

அமைச்சர்கள் இராஜிநாமா செய்யவில்லை அது தொடர்பில் அரச தரப்பினர் பொய்களைக் கூறி வருகின்றனர் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.அமைச்சரவை கலைக்கப்பட்டு அமைச்சர்கள் இராஜிநாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே முதலில் நீங்கள் அதனை பார்வையிட வேண்டும்.

அமைச்சர்கள் வழமைபோன்று அமைச்சர்களுக்கான ஆசனத்தில் அமர்ந்தி ருப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் சபாநாயகரின் ஏற்பாட்டில் அவர்கள் உரிய ஆசனங்களில் அமர்வர். அதுவரை அவர்கள் தத்தமது  ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.

எவ்வாறெனினும்  பதவி விலகிய பின்னும் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், அமைச்சர்களுக்கான வாகனங்களை அவர்கள் உபயோகப் படுத்தினால் அது தொடர்பில் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47