நிபந்தனைகளின் அடிப்படையில் 30ஆம் திகதி வரை பதவி வகிப்பேன் - பிரதி சபாநாயகர் 

08 Apr, 2022 | 10:57 PM
image

(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த  நியாயமான கோரிக்கையை இரு நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டு எதிர்வரும் 30ஆம் திகதி வரை பிரதி சபாநாயகர் பதவி வகிக்க தீர்மானித்துள்ளேன். 

எனினும் பதவி வகிக்கும் காலத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கான வரப்பிரசாரங்களை பெற்றுக்கொள்ளபோவதில்லை என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய சபைக்கு அறிவித்தார்.

பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் நாடு மோசமான நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதி சபாநாயகம் , தற்போதைய நிலைமையில் இருந்து மீள்வதற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இலாபநோக்கமற்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர்  வெள்ளிக்கிழமை சபாநாயகர் தலைமையில் கூடியவேளை சிறப்பு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படவும், இதுவரை காலமும் அரசாங்கத்தில் வகித்த பதவிகளை துறக்கவும் தீர்மானித்துள்ளது. 

அதற்கமைய நான் வகித்த பிரதி சபாநாயகர் பதவி அரசாங்கத்தின் பதவி அல்ல. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையோரது ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட பதவியாக  கருதுகிறேன்.

நாட்டு மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து அரசியலமைப்பின் 74(2) பிரிவிற்கமைய பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலக தீர்மானித்து , அத்தீர்மானத்தை கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதியிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தேன்.

பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதுடன்  அது பாராளுமன்றிற்கு அறிவிக்கப்பட்டு  உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுவது வழமையானது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது  பிரதி சபாநாயகர் பதவி விலகல் குறித்து ஜனாதிபதி சுதந்திர கட்சியுடன் உரையாடியுள்ளார்.

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து பிரதிசபாநாயகர் பதவி வகிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வேண்டாம் என போராடும் இளம் தலைமுறையினரிடம் கேட்கிறேன்  சர்வசன வாக்குறுரிமைக்கு  மாறாக எவ்வாறான ஆட்சியை எதிர்பார்க்கிறீர்கள்? அது எத்தன்மையில் அமையும் என்பதை சற்ற சிந்தித்து பாருங்கள்.

தற்போதைய அரசியல் செயலொழுங்கில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்ற என்பதை ஏற்றுக்கொள்கிறோம். 

பல்வேறு காரணிகளை மீளாய்வு செய்து இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் தொடர்ந்து பிரதி சபாநாயகர் பதவி வகிக்க தீர்மானித்துள்ளேன்.

இம்மாதம் வரை மாத்திரம் பிரதி சபாநாயகர் பதவி வகிக்க தீர்மானித்துள்ளேன். 

பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 5ஆம் திகதி அறிவித்த  வேளையிலிருந்து பிரதி சபாநாயகர் பதவிக்கான வரப்பிரசாதங்களை அனுபவிக்க எதிர்பார்க்கவில்லை. 

ஒருவேளை வரப்பிரசாதங்களை அனுபவித்திருந்தால்  அதற்கான செலவீனத்தை அறவிட பாராளுமன்ற கணக்காளருக்கு அறிவிக்குமாறு வலியுறுத்துகிறேன்.

பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஜனாதிபதியின் சாதாரண வலிறுத்தலை ஏற்றுக்கொண்டுள்ளேன்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சுயநல இலாபத்தை பெற்றுக்கொள்வதை விடுத்து  பாராளுமனற் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றினைந்து பொது கொள்கைக்கமைய செயற்பட வேண்டும் என்பதை சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01