இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தியதன் விளைவையே தற்போது நாம் அனுபவிக்கின்றோம் - ராஜித்த 

08 Apr, 2022 | 01:44 PM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்த பொய் பிரசாரங்களே இந்த நெருக்கடிக்கு காரணமாகும்.

அதனால் நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் உறுதியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று வழங்கப்படாவிட்டால் நாடு வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (7 ) இரண்டாவது நாளாக இடம்பெற்பட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு உணவு இல்லை, பிள்ளைகளுக்கு பால் மா இல்லை, வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை. மின்சாரம் இல்லாமல் தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டுள்ளன நாட்டில் நெருக்கடி நிலை உக்கிரமடைந்துள்ளது.

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் உறுதியான அரசியல் தலைமைத்துவம் ஒன்று வழங்கப்படாவிட்டால் நாடு வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது. 

புதிய தேர்தல் ஒன்றை நடத்தி இதற்குத் தீர்வு காணலாம், ஆனால் அதற்கு 860 கோடி ரூபாய் தேவைப்படும். மக்கள் தற்போதுள்ள நிலையில் அந்தளவு நிதிக்கு எங்கே செல்வது?

நிதி இல்லாமல் எந்த அரசாங்கத்தையும் முன்கொண்டு செல்லமுடியாது இத்தகைய இடைக்கால அரசாங்கத்தை நிறுவினாலும் நிதி மிக அவசியமாகிறது.  

மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுக்க முடியும். 

இனவாதத்தை பரப்பி மக்களை பிளவு படுத்த இந்த நாட்டில் எவரும் நினைத்தால் அது ஒருபோதும் முடியாது. 

கடந்த காலங்களில் குறி்ப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொய் பிரசாரங்களை கட்டிவிழ்த்து அரசாங்கம் அரசியல் லாபம் தேடிவந்தது. 

நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தியதன் விளைவையே தற்போது நாங்கள் அனுபவிக்கின்றோம். 

சிறுபான்மை மக்களுக்கு எதிராக அன்று செயற்பட்ட பெளத்த தேரர்களை இன்று சிங்கள இளைஞர்கள் அவர்களின் உருவப்படங்களை முகப்புத்தகங்களில் பிரசுரித்து, கடுமையாக விமர்சித்து வருவதை காண்கின்றோம்.  

சிங்கள இளைஞர்கள் தற்போது அரசாங்கத்தின் உண்மை நிலையை உணர்ந்துள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44