பஷில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் : திஸ்ஸ விதாரண

08 Apr, 2022 | 10:55 AM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பொருளாதார நிபுணர்கள் அடங்கிய பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை காலம் கடந்த தீர்மானமாக காணப்பட்டாலும் வரவேற்கத்தக்கது.

பொருளாதார மீட்சி தொடர்பிலான தீர்மானங்களில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பொருளாதாரம் தீவிரமடைந்ததை தொடர்ந்து அரசியல் நெருக்கடி தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தான் மூல காரணம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

நாட்டு மக்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதற்கும் அவர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தை காட்டிலும் அவர் பொருளாதார தாக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

பொருளாதார மீட்சி தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில் முன்வைத்த யோசனைகளை  முழுமையாக செயற்படுத்தியிருந்தால் பொருளாதார நெருக்கடியினை சமநிலைப்படுத்தியிருக்கலாம்.

பொருளாதார துறைசார் நிபுணர்கள் சுயமாகவே முன்வந்து பல திட்டங்களை அரசாங்கத்திடம் முன்வைத்தார்கள்.அவற்றை செயற்படுத்த நிதியமைச்சர் என்ற ரீதியில் பஷில் ராஜபக்ஷ இடமளிக்கவில்லை.

இந்திய கடனுதவி திட்டத்தை முழுமையாக நம்பியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நிதியுதவியை வழங்கி வருகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 2010 ஆம் ஆண்டு காலத்திற்கு பின்னரான அரசாங்கத்தை குறுகிய காலத்தில் பலவீனப்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தையும் இரண்டு வருட காலத்திற்குள் இல்லாதொழித்து முழு நாட்டு மக்களையும் வீதிக்கிறக்கியுள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பொருளாதார நிபுணர்கள் அடங்கிய பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை காலம் கடந்த தீர்மானமாக காணப்பட்டாலும் வரவேற்கத்தக்கது.

பொருளாதார மீட்சி தொடர்பிலான தீர்மானங்கள் மற்றும் அவற்றை செயற்படுத்தல் ஆகியவற்றில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தொடர்ந்து பஷில் ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு மென்மேலும் பாதிக்கப்பட்டு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கம் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கு கிடையாது.

நாட்டு மக்கள் குறித்து அவர் அக்கறை கொண்டிருந்தால் பிரச்சினைகளை தீவிரப்படுத்தியிருக்கமாட்டார்.

பொருளாதார நெருக்கடியினால் மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு அவர் மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14