150 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் : நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படவேண்டும் - சஜித் 

Published By: Digital Desk 4

07 Apr, 2022 | 08:33 PM
image

(நா.தனுஜா)

பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை பெருமளவான மக்களின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியிலுள்ள 150 இடங்களில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அரசாங்கத்தின் செயற்திறனற்ற நிர்வாகம் மற்றும் இயலாமையின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், அதன் விளைவாக அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம், பொருட்களுக்கான தட்டுப்பாடு, வாழ்க்கைச்செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் உடனடியாகப் பதவி விலகவேண்டும் எனவும் வலியுறுத்தி நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள முக்கிய பிரதேசங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மக்கள் நடப்பு அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். 'பொறுத்திருந்தது போதும்: அரசாங்கத்தை வீ;ட்டுக்கு அனுப்புவோம்', 'வாழ்க்கைச்செலவைக் குறையுங்கள்', 'பொருட்களின் விலைகளை அதிகரிக்கவேண்டாம்', அரிசி, சீனி, உரம், எரபொருள் இல்லை', 'மருந்துப்பொருட்கள் இல்லை', 'கோ ஹோம் கோட்டா', 'கோ ஹோம் ராஜபக்ஷ', 'அரசாங்கமே, பதவி விலகு' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

அதுமாத்திரமன்றி அவர்கள் 'கோட்டா ஃபெயில் (தோல்வி)', 'கோட்டா முட்டாள்', 'கோட்டா கெதர யன்ன (கோட்டா வீட்டிற்குச் செல்லுங்கள்)' போன்ற கோஷங்களையும் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் கலந்துகெர்ணடவர்கள் 'கோ ஹோம் கோட்டா' என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்ட கறுப்புநிறப்பட்டிகளை நெற்றியிலும் கைகளிலும் கட்டியிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்குக்கூட்டணியினரால் தலவாக்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு மக்கள்முன் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதாவது,

இன, மத, கட்சி வேறுபாடின்றி வீதிக்கு இறங்கியுள்ள மக்களின் இதயத்துடிப்பை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் உண்மையில் அதனைப் புரிந்துகொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. இன்றளவிலே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழவேண்டிய நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இப்பிரச்சினைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன, மத, கட்சி பேதங்களைத்தூண்டி மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு யாரேனும் முயன்றால், அதற்கு எதிராக எமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபடும்.

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து, அதன்மூலம் ஏகாதிபத்தியவாத அடிப்படையிலான சர்வாதிகாரம் முழுமையாக ஒழிக்கப்படவேண்டும்.

நாட்டுமக்கள் அனைவரும் சுதந்திரமான வாழக்கூடிய ஜனநாயக ஆட்சிமுறையே நாட்டிற்கு அவசியமாகும். அதேவேளை தோட்டத்தொழிலாளர்களாகத் துன்பப்படும் மக்களை தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் கனவை நனவாக்குவதற்கு இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24