தனிநபரிடமுள்ள நிறைவேற்றதிகார முறைமையை  இல்லாதொழிப்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் - மரிக்கார்

07 Apr, 2022 | 07:20 PM
image

(எம்.மனோசித்ரா)

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. 

தனிநபரிடம் குவிக்கப்பட்டுள்ள நிறைவேற்றதிகார முறைமையை  இல்லாதொழிப்பதையும் , பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையுமே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 7 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஆரம்பத்திலேயே கூறிய போதிலும் , அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை அதன் விளைவினையே தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை அல்ல.

தனிநபரொருவரிடம் குவிக்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்தல், பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், சர்வாதிகாரத்தை இல்லாதொழித்தல் ஆகிய பணிகளை பாராளுமன்றத்திற்குள் மேற்கொள்ள முடியும். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு, எமது அமைச்சர்களின் சிறப்புரிமைகளை ஒழித்தல் போன்ற பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் பிரேரணைகளை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட வேண்டும். 

கடன் மறுசீரமைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னுரிமையானது.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான உதவிகளை செய்யக்கூடிய குழுவொன்றின் ஊடாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க சர்வதேச உதவித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். 

225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிக்கின்றனர். 

தேசியக் கொள்கையொன்றுக்கூடாக நாடு சரியான திசைக்கு திசை திருப்பப்பட வேண்டும். 

ஜனநாயகத்தை ஆதரித்து உரிமைகள் பாதுகாக்கப்பட்ட சம வாய்ப்புகளுக்கான அணுகலுடைய நாட்டையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40