இலங்கை மிக விரைவில் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள போகின்றது. ஆனால் அரசாங்கம் போகம் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தாது மக்கள் மீது தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை கொடுத்து வருவதாக குற்றம் சுமத்திய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன, அரிசிக்காக வெளிநாடுகளை தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்ற போது அதில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.