சவூதி பிரஜை ஒருவரை கொன்ற குற்றத்திற்காக சவூதி நாட்டு இளவரசர் துர்கி பின் சவுத் அல் கபீருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை  மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேற்படி இளவரசர், மூன்று வருடங்களுக்கு முன் தனது சக சவூதி பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக அவரை சுட்டுக் கொண்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் குடும்பம் கொலைக்கு பிரதியீடாக “குருதிப்பணம்” பெறுவதை மறுத்ததையடுத்தே மரண தண்டனை நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வருடம் சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் குறித்த‌ இளவரசர் 134 ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.