கமின்ஸின் அதிரடியால் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

07 Apr, 2022 | 12:21 PM
image

முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக பூனே விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பெட் கமின்ஸ் குவித்த அதிரடி சதத்தின் உதவியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலாம் இடத்தை அடைந்துள்ளது.

இவ் வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து 9ஆவது இடத்தில் இருக்கின்றது.

மும்பை இண்டியன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 162 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து குறித்த வெற்றி இலக்கை அடைந்தது.

14ஆவது ஓவரில் ஆடுகளம் நுழைந்த பெட் கமின்ஸ் 14 பந்துகளில் அரைச் சதத்தை பூர்த்தி செய்து கொல்கத்தாவின் வெற்றியை உறுதிசெய்தார்.

15 பந்துகளை எதிர்கொண்ட பெட் கமின்ஸ் 6 சிச்ஸ்கள், 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.

ஆரம்ப வீரர் வெங்கடேஷ் ஐயர் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

இவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 17 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மற்றைய துடுப்பாட்ட வீரர்களான அஜின்கியா ரஹானே (7), அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் (10), சாம் பில்லிங்ஸ் (17), நிட்டிஷ் ரானா (8), அண்ட்றே ரசல் (11) ஆகியோர் பிரகாசிக்கத் தவறினர்.

மும்பை பந்துவீச்சில் முருகன் அஷ்வின் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டைமல் மில்ஸ் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (3), இஷான் கிஷான் (14), டிவோல்ட் ப்ரெவிஸ் (29) ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது அணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. (55 - 3 விக்.)

எனினும் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, கிரன் பொலார்ட் ஆகிய மூவரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தி மும்பையின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ஓட்டங்களையும் திலக் வர்மா 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இவர்களைவிட அதிரடியில் இறங்கிய கீரன் பொலார்ட் 5 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 சிக்ஸ்களுடன் 22 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.

கொல்கத்தா பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49