(K.Kapila)

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்த முஸ்லிம் மத விவகார மற்றும் தபால் அமைச்சின் இணைப்பு செயலாளர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 20 இலட்சம் மூபா பெறுமதியான 4 தங்க பிஸ்கெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.