பெட்னா நிறுவனம் தமது புதிய தயாரிப்பான “Diabe Tea-Sabaragamuwa” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

06 Apr, 2022 | 07:24 PM
image

இலங்கை ஹெர்பல் தேயிலை துறையில் முன்னோடியாக திகழும் Fadna Tea (Pvt) Ltd தமது புதிய தயாரிப்பான “Diabe Tea-Sabaragamuwa” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட குணநலன்களை உடைய இயற்கையான தேநீர் தயாரிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச தரங்களுக்கு ஒப்பான ஹெர்பல் தேநீர் தயாரிப்புகளை வழங்கி வருகின்றது.

இந்த தயாரிப்பு இரத்த சக்கரை தொடர்பான நோய்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் 100% இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 

சமூகத்தில் இத்தகைய நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் அன்றாடப் போராட்டங்களை ஓரளவு குறைக்கும் ஒரு தயாரிப்பை உருவாக்க பெட்னா டீ முயற்சித்து அதில் வெற்றி கண்டுள்ளது. 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தின் துரித உயர்கல்வி விரிவாக்கம் மற்றும் அபிவிருத்தி செயற்பாட்டின் (AHEAD) ஒத்துழைப்புடன் இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் குறித்து சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் உதய ரத்தநாயக்க கருத்து தெரிவிக்கையில், 

“பல்கலைக்கழகம் என்ற வகையில் நாம் தொடர்ச்சியாக இவ்வாறான தயாரிப்பு அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் Diabe Tea-Saberagamuwa ஐ அறிமுகப்படுத்துவதும் வணிகமயமாக்குவதும் ஒரு சிறந்த முயற்சியாகும். 

வரவிருக்கும் திட்டங்களுக்கு சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பெட்னா மற்றும் பிற நிறுவனங்களுடன் இதுபோன்ற திட்டங்களைச் செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பெட்னா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.சமேந்திர சோமதுங்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,  

"சமூகங்கள் மற்றும் நாடுகளின் வளர்ச்சிக்கு பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தொடர்புடைய கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது. 

இந்தப் புதுமையிலிருந்து பிறக்கும் தயாரிப்புகளை வணிகமயமாக்குவது, மக்களுக்கு குறிப்பாக இரத்தச் சக்கரை தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதற்கான புதிய வழிகளைத் திறப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தையும் ஆதரிக்கிறது. 

இந்த தயாரிப்பை வெற்றியடையச் செய்வதற்கான (AHEAD) கிராண்ட் அவர்களின் ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் உதவிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். எதிர்காலத்தில் இதேபோன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வணிகமயமாக்கி நீண்ட காலத்திற்கு அதிக மக்களுக்கு சேவை செய்ய நாங்கள் நம்புகிறோம்.

பெட்னா டீ (பிரைவேட்) லிமிடெட், நாடு முழுவதும் உள்ள மதிப்புமிக்க ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து சிறந்த தயாரிப்புக்களை உருவாக்க முயற்சிக்கிறது. 

தயாரிப்புகளின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன, அங்கு ஆராய்ச்சி முடிவுகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன. 

இலங்கையின் தேயிலை தொழிற்துறைக்கு புத்துயிர் அளித்து, அவர்களின் அனைத்து தயாரிப்புகளின் மூலத்திலும் காணக்கூடிய உயர்ந்த தரத்தின் மூலம் Fadna Diabe Tea-Sabaragamuwa இலங்கை மக்களின் வாழ்க்கை முறைகளை உண்மையாக உயர்த்துவதற்கான Fadnaவின் பயணத்தில் ஒரு படியாகும்.

பெட்னா தயாரிப்புகள் உலகம் முழுவதும் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்த பெரிய முன்னேற்றங்களுடன், கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய சூத்திரங்களின் அடிப்படையில் பெட்னா அதன் உற்பத்தி களத்தை செயல்பாட்டு அழகுசாதனப் பொருட்களுக்கு விரிவுபடுத்தவுள்ளமை மற்றுமொரு முக்கிய செயற்பாடாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58