யாழ்ப்பாணத்தை அண்மித்த தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை சீராக முன்னெடுப்பதற்கு கடற்படையினரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பாதுகாப்பு அமைச்சும் அனுபதித்துள்ளது.

அதற்கமைய யாழ்.சுருவில் பகுதியில் படகுகளின் தொழில்நுட்ப தரத்தினை பரிசோதிக்கும் பொருட்டு படகு திருத்தும் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கும்,  வணிக கப்பற் செயலகத்தின உப அலுவலகமொன்றினை ஊர்காவற்றுறையில் திறப்பதற்கும் அமைச்சு அனுமதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சி ஊடகப் பேச்சாளர் தமீர மஞ்சு கேசரிக்கு தெரிவித்தார்.