கார்த்திக், ஷாபாஸ் ஆகியோரின் சிறந்த பங்களிப்பில் பெங்களூர் அபார வெற்றி

06 Apr, 2022 | 02:35 PM
image

(என்.வீ.ஏ.)

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே விளையாட்டரங்கில் நேற்று 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 5 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்களால் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றிபெற்றது.

தமிழகத்தின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் முன்னாள் வீரருமான தினேஷ் கார்த்திக், போட்டி ஒன்றை சிறப்பாக முடித்துக்கொடுக்கக்கூடியவர் என்பதை இந்தப் போட்டியிலும் நிரூபித்தார்.

ராஜஸ்தான் றோயல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றி பெங்களூர் அணிக்கு இலகுவாக அமைந்துவிடவில்லை.

அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் (29), அனுஜ் ராவத் (26) ஆகிய இருவரும் 7 ஓவர்களில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்த பெங்களூர் 12.3 ஆவது ஓவரில் 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

அதன் வெற்றிக்கு 45 பந்துகளில் மேலும் 83 ஓட்டங்கள் தேவைப்பட்டதால் அவ்வணி பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.

இந் நிலையில் ஷாபாஸ் அஹ்மதுடன் 7ஆம் இலக்க வீரராக இணைந்த தினேஷ் கார்த்திக் 6ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து பெங்களூர் அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 12 ஓட்டங்களை 7 பந்துகளில் கார்த்திக்கும் ஹர்ஷால் பட்டேலும் பெற்றுக்கொடுத்து, இவ் வருட ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை முதல் தடவையாக தோல்வி அடையச் செய்தனர்.

36 வயதுடைய கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். பட்டேல் ஆட்டமிழக்காமல் 9 ஓட்டங்களைப் பெற்றார்.

ராஜஸ்தான் பந்துவீச்சில் யுஸ்வேந்த்ர சஹால் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

மொத்த எண்ணிக்கை 2ஆவது ஓவரில் 6 ஓட்டங்களாக இருந்தபோது யஷஸ்வி ஜஸ்வால் (4) ஆட்டமிழந்தபோதிலும் ஜொஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மியர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

மும்பை இண்டியன்ஸுடனான போட்டியில் சதம் குவித்த ஜொஸ் பட்லர். இந்தப் போட்டியிலும் திறமையாக துடுப்பெடுத்தாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 70  ஓட்டங்களைக் குவித்தார்.

40 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 6 சிக்ஸ்களை விளாசியபோதிலும் ஒரு பவுண்ட்றியையும் அடிக்கவில்லை.

37 ஓட்டங்களைப் பெற்ற படிக்கல்லுடன் 2ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜொஸ் பட்லர், பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் ஷிம்ரன் ஹெட்மியருடன் மேலும் 83 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஷிம்ரன் ஹெட்மியர் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார், இதனிடையே அணித் தலைவர் சஞ்சு செம்சன் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

பந்துவீச்சில ஹர்ஷல் பட்டேல் 18 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் டேவிட் வில்லி 29 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் வனிந்து ஹசரங்க டி சில்வா 32 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58