எரிபொருளுக்காக காத்திருந்த பஸ் பயணியின் உயிரை பறித்தது  - யாழில் பரிதாபம்

Published By: Digital Desk 3

06 Apr, 2022 | 09:33 AM
image

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பஸ்ஸின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார் .

" உயிரிழந்தவர் வயாவிளான் நோக்கி பஸ்ஸின் பயணித்துள்ளார். எனினும் தூக்கத்தில் அவர் வயாவிளானில் இறங்கவில்லை. பஸ் நடத்துனரும் கவனயீனத்தால் கவனிக்கவில்லை.

மீண்டும் பஸ் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்து புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் காத்திருந்துள்ளது. அதனால் கீழே இறங்கிய பயணி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார். அதனை அவதானிக்காக சாரதி பேருந்தை எடுத்த போது பயணி மீது ஏறியுள்ளது.

பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பஸ் சாரதி அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார்" என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் உடற்கூற்று பரிசோதனைக்கு அறிக்கையிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51