மிரிஹானை ஆர்ப்பாட்டம் : கைதானோரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கியமை தொடர்பில் விசாரணை செய்ய உத்தரவு

Published By: Digital Desk 4

05 Apr, 2022 | 11:08 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அத்தியவசியமான பொருட்களாக கருதப்படும் உணவு, சமயல் எரிவாயு, பால் மா, மின்சாரம், மருந்துகள் போன்றவற்றை  பெற்றுக்கொள்ள நாடளாவிய ரீதியில் காணப்படும்  சிரமத்தால், ஜனாதிபதியின் மிரிஹானை இல்லத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, அது சார்ந்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலர், மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தர்விடப்பட்டுள்ளது. 

மிரிஹான ஆர்ப்பாட்டம் - விசாரணைகளுக்கு 3 விஷேட பிரிவுகள் | Virakesari.lk

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இதற்கான உத்தர்வை இன்று ( 5) நுகேகொட வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சருக்கு பிறப்பித்துள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி,  இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணைக்கான உத்தரவு இன்று பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.

 மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நபர்கள் தாக்கப்பட்டமை,  அமைதி ஆர்ப்பாட்டத்தை குழப்பும் வகையில்  தாக்குதல் நடாத்திய பொலிஸ் மற்றும் இராணுவத்தினர்,  தக்குதலுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள்,  தாக்குதல்களை மேற்பார்வை செய்த அதிகாரிகள்,  பஸ் வண்டிக்கு தீ மூட்ட இடமளித்து பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ், இராணுவ மற்றும்  பொலிஸ்  விஷேட அதிரடிப் படையினரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடளித்தது.

 இது தொடர்பிலேயே ஆராய்ந்து, குறித்த முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் இன்று ( 5) நுகேகொட பொலிஸ் அத்தியட்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58