ஏறாவூர் இரட்டைக்கொலை : அறுவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு.!

Published By: Robert

19 Oct, 2016 | 02:45 PM
image

ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த சந்தேக நபர்கள் அறுவரும் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் இச்சந்தேக நபர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு ஆஜராக்கப்பட்ட வேளையில் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (24) (கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீரா பானு மாஹிர் (32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த 11.09.2016 அன்று பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

படுகொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்டிருந்த தங்க நகைகளை புலனாய்வுப் பொலிஸார் திருகோணமலை மாவட்டம் முள்ளிப்பொத்தானையில் மீட்டிருந்தனர்.

ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புட்ட 17 வகையான சான்றுப் பொருட்கள் விஞ்ஞான ரீதியான உறுதிப்படுத்தலுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ன.

இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 6 பேரினது இரத்த மாதிரிகளும் விஞ்ஞான ரீதியான உறுதிப்படுத்தலுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு கடந்த 05.10.2016 அன்று அனுப்பி வைக்கப்பட்டன.

- அப்துல் கையூம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34