லசந்­த கொலை:   மஹிந்­தவின் வைத்­தி­ய­ரிடம் 3 மணி நேரம் விசா­ரணை  - பொன்­சே­கா­வி­டமும் விசா­ரணை செய்யும் சாத்­தியம்  

Published By: MD.Lucias

22 Dec, 2015 | 09:51 AM
image

 

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொலை குறித்து முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் பிரத்­தி­யேக வைத்­தியர் எலி­யந்த வைட்­டிடம் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ளது. கோட்­டையில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்தில் வைத்து சுமார் மூன்று மணி நேரம் இந்த விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­ட­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

நேற்று காலை 10.00 மணிக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அங்கு ஆஜ­ரா­கி­யி­ருந்த எலி­யந்த வைட் பிற்­பகல் 1.00 மணி வரை விஷேட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது.

லசந்த கொலை செய்­யப்­பட முன்னர் அல்­லது கொலை நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சில தகவல் பரி­மாற்­றங்கள் தொடர்பில் இதன் போது விசா­ரணை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கின்­றது.இத­னி­டையே சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொலை தொடர்பில் எதிர்­வரும் நாட்­களில் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­காவை விசா­ரணை செய்­வது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. எதிர்­வரும் நாட்­களில் இது குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கலாம் என அந்த தக­வல்கள் மேலும் தெரி­வித்­தன.

சரத் பொன்­சேகா இரா­ணுவ தள­ப­தி­யாக இருந்த போதே இரத்­ம­லானை அதி­யுயர் பாது­காப்பு வல­யத்­துக்குள் வைத்து லசந்த விக்­ர­ம­துங்க அடை­யாளம் தெரி­யாத துப்­பாக்­கி­தா­ரி­களின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்தார். அப்­போது இரத்­ம­லானை அதி உயர் பாது­காப்பு வல­யத்­துக்கு பொறுப்­பாக பொன்­சே­காவின் மிக நெருங்­கிய நம்­பிக்­கைக்கு உரி­ய­வ­ராக இருந்த பிரி­கே­டியர் துமிந்த கெப்­பட்­டி­வ­லான இருந்தார். இந் நிலையில் கிடைக்கப் பெற்­றுள்ள சில தக­வல்­களை மையப்­ப­டுத்தி சரத் பொன்­சே­கா­விடம் வாக்கு மூலம் ஒன்­றினை எதிர்­வரும் நாட்­களில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பெற­வுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இதனை விட முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் நெருங்­கிய சகா­வாக கரு­தப்­படும் அப்­போது புல­னாய்வுப் பிரிவு முக்­கி­யஸ்­த­ராக இருந்த அமல் குண­சே­க­ர­வுக்கு எதி­ரா­கவும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க புல­னாய்வுப் பிரிவு ஆராய்ந்து வரு­வ­தா­கவும் அவ­ருக்கு எதி­ராக சாட்­சி­யங்­களை மறைத்த குற்றச் சாட்டு தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

முன்­ன­தாக கல்­கிஸை பொலிஸ் நிலை­யத்தில் இருந்து காணாமல் போன­தாக கூறப்­படும் லசந்த விக்­ர­ம­துங்­கவின் குறிப்புப் புத்­தகம் மற்றும் அது தொடர்­பி­லான பதி­வு­களைக் கொண்­டி­ருந்த கல்­கிஸை பொலிஸ் நிலை­யத்தின் அன்­றாட தகவல் புத்­த­கத்தின் பக்­கங்கள் தொடர்பில் இந்த விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பில கடந்த வாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­கி­ர­ம­ரட்ன, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஹேமந்த அதி­காரி மற்றும் அப்­போ­தைய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மகேஷ் பெரேரா ஆகியோர் விசா­ரிக்­கப்­பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

எவ்­வா­றா­யினும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன தனக்கு குறித்த குறிப்புப் புத்­தகம் தொடர்பில் எவ்­வித தக­வலும் தெரி­யாது என விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 2009 ஜன­வரி 8 ஆம் திகதி கொலை செய்­யப்­பட்ட லசந்த விக்­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட முன்னர் அவ­ரது காரை பின் தொடர்ந்து வந்த கொலை­யா­ளி­களின் வாகன இலக்­கத்தை குறிப்புப் புத்­த­கத்தில் பதிவு செய்­தி­ருந்­த­தாக விச­ார­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது. அவரை யாரோ துரத்­து ­கி­றார்கள் என தெரிந்­ததும் தற்­போ­தைய அரசின் முக்­கிய நபர் ஒரு­வ­ருக்கு லசந்த விக்­ர­ம­துங்க தொலை­பே­சி­யூ­டாக விட­யத்தை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். அவர் உடனே வாகன இலக்­கத்தை கேட்டபோது தனது காரின் பக்க வாட்டு கண்­ணா­டி­யூ­டா க பார்த்து அதனை தனது குறிப்புப் புத்­த­கத்தில் பதிவு செய்­துள்ள லசந்த அதனை குறித்த முக்­கி­யஸ்­த­ருக்கு அறி­விப்­ப­தற்குள் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இந் நிலை­யி­லேயே குற்றம் இடம்­பெற்ற இடத்தை சோதனை செய்த கல்­கிஸை பொலிஸார் அந்த குறிப்புப் புத்­த­கத்தை மீட்­டுள்­ளனர். அது தொடர்­பி­லான தக­வல்­களை பொலிஸில் அன்­றாடம் தக­வல்­களை பதிவு செய்யும் பதிவுப் புத்­த­க­மான ஆர்.ஐ.பி. புத்­த­கத்­திலும் எழு­தி­யுள்­ளனர்.

பின்னர் அப்­போ­தைய பொலிஸ் மா அதி­பரின் பெயரைப் பயன்­ப­டுத்தி அந்த குறிப்புப் புத்­தகம் கல்­கிஸை பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து வெளியே எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துச் செல் லப்பட்டதாக கூறப்படும் அந்த புத்தகம் மிரிஹானையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல் லப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19