கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

05 Apr, 2022 | 10:41 AM
image

கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு 35 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரை  மோதித்தள்ளியது.

இதன்போது  படுகாயமடைந்த முரசுமோட்டை சேர்ந்த குடும்பஸ்தர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு (04) இரவு 7.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

முரசுமோட்டை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றியவாறு வேகமாக வந்த டிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை  மோதி தள்ளிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து   கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வீதிப் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் இருவரின் துணையுடன்  குறித்த டிப்பர் தப்பிச்சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில்  இரவு 9.47 மணிவரை எந்தவித விசாரணைகளை மேற்கொள்ளாது  அதன் பின்னரே குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை   ஆரம்பித்துள்ளனர்.

குறித்த டிப்பர் வாகனம் மணல் ஏற்றிய நிலையில் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அதனை பொலிஸாரின் உதவியுடன்  மணலுடன் கொண்டு சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right