புதிய அமைச்சர்களின் நியமனம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு : ஒரு போதும் அரசாங்கத்துடன் இணையோம் - தமிழ் கட்சிகள்

05 Apr, 2022 | 06:55 AM
image

(நா.தனுஜா)

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி அமைக்கப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அழைப்பை தாம் நிராகரிப்பதாகவும், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் இடைக்கால அரசாங்கத்தில் தாம் இணைந்துகொள்ளப்போவதில்லை என்று வடக்கு, கிழக்கு தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.

 

இதுகுறித்து கேசரிக்குக் கருத்துவெளியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், தற்போது அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் கூட்டமைப்பு இணையாது என்று தெரிவித்தார்.

 

'மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடியவர்களை 'சங்கீதக்கதிரை' போன்று மாற்றி, மீண்டும் அமைச்சுப்பதவிகளுக்கு நியமிக்கின்ற வேலையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 

அண்மைய போராட்டங்கள் மூலம் மக்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கையை அவர்கள் பிழையாக விளங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. 

முழுக்குடும்பமும் பதவியிலிருந்து விலகவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது' என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

 தற்போது தேர்தலுக்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கின்றதா? என வினவியபோது 'இல்லை' என்று பதிலளித்த சுமந்திரன், இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பிறிதொருவர் தெரிவுசெய்யப்பட்டால், அப்போது கூட்டமைப்பு இடைக்கால அரசாங்கத்துடன் இணையுமா? என்ற கேள்விக்கும் 'இல்லை' என்று பதிலளித்தார்.

 'மாற்றுத்தலைமைத்துவத்தின் கீழான இடைக்கால அரசாங்கத்திலும் கூட்டமைப்பு இணையாது என்பது வேறுவிடயம். ஆனால் தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்பினர், இடைக்கால அரசாங்கம் அமைப்பது குறித்து அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், அதுகுறித்துத் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்துவிட்டு, ஏனையோரை அதில் இணைந்துகொள்ளுமாறு கூறுவது ஏற்புடையதன்று' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

அதேவேளை இதுபற்றி கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.சிறிதரன் கூறுகையில், 'தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம் காபந்து அரசாங்கத்தை அமைக்கலாம். ஆனால் அதில் கூட்டமைப்பு இணைந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. 

ஏனெனில் தமிழ்மக்களின் பிரச்சினைகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன. அவ்வாறிருக்கையில் நாம் காபந்து அரசாங்கத்தில் இணைந்துகொள்வதென்பது நாமாகவே தற்கொலை செய்துகொள்வதற்குச் சமனாகும். ஆகவே இப்போது நாம் அவதானிப்பாளர்களாக இருப்பதே உகந்ததாகும்' என்றார்.

 

அதேவேளை ஜனாதிபதி அழைப்புவிடுத்திருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் தாம் இணைந்துகொள்ளப்போவதில்லை என்று கேசரியிடம் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதுகுறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார்:

தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களே, இப்போது அந்த அரசாங்கத்திற்கு எதிராகக் கொந்தளித்து வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றி, அவர்களுக்குத் துரோகமிழைத்திருப்பதே அதற்குக் காரணமாகும். 

அதேவேளை மக்களின் பிரச்சினைகளுக்குச் செவிகொடுத்து, அவர்களது மனோநிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனைபேர் இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகும். அதேபோன்று தற்போது அமைக்கப்படவிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் அத்தகைய உறுப்பினர்கள் எத்தனைபேர் இருப்பார்கள் என்பதும் சந்தேகத்திற்குரிய விடயமேயாகும்.

எனவே இத்தகைய தவறான நிலைப்பாட்டில் இருந்துகொண்டு, புதிய தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட புதிய பிரதிநிதிகளின்றி நாடு என்ற ரீதியில் எம்மால் முன்நோக்கிப் பயணிக்கமுடியாது. அதேவேளை எமக்கான தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்படும் வரை நாம் அரசாங்கத்துடன் இணையமாட்டோம் என்றார்.

 மேலும் இடைக்கால அரசாங்கத்தில் இணைவது குறித்து தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாவது:

ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருக்கும் இடைக்கால அரசாங்கத்தில் நாம் இணையமாட்டோம். ஆனால் அரசியலமைப்பின் ஊடாக தமிழ்மக்களுக்கான சமஷ்டி முறையிலானதீர்வை வழங்குவதாக எழுத்துமூலம் உறுதியளிக்கும்பட்சத்தில், இதுகுறித்துப் பரிசீலிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37