சென்னை  சுப்பர் கிங்ஸை 54 ஓட்டங்களால் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் 

Published By: Digital Desk 4

04 Apr, 2022 | 10:04 PM
image

(என்.வீ.ஏ.)

சென்னை  சுப்பர் கிங்ஸுக்கு எதிராக மும்பை ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பஞ்சாப் கிங்ஸ் 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Dhawan and Livingstone shared a crucial stand for PBKS.

தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பிறீமியர் லீக் 15ஆவது அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்ததுடன் பஞ்சாப் கிங்ஸ் தனது 3 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை ஈட்டிக்கொண்டது.

லியாம் லிவிங்ஸ்டோனின் சகலதுறை ஆட்டமும் ராகுல் சஹார், வை பாவ் அரோரா ஆகியோரின் சிறந்த பந்துவீச்சும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவின.

பஞ்சாப் கிங்ஸினால்   நிர்ணயிக்கப்பட்ட 181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சுப்பர் கிங்ஸ் பவர் ப்ளே முடிவில் 4 விக்கெட்களை இழந்து 27 ஓட்டங்களையும் 8 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 38 ஓட்டங்களையும் பெற்று மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

Livingstone acknowledges the crowd after scoring a blazing fifty.

ருட்டுராஜ் கய்க்வாட் (1), ரொபின் உத்தப்பா (13), மொயீன் அலி (0), ரவிந்த்ர ஜடேஜா (0), அம்பாட்டி ராயுடு (13) ஆகியோரே 8 ஓவர்களில் ஆட்டமிழந்த வீரர்களாவர்.

அந்த சந்தர்ப்பத்தில் எதிர்த்தாடுவதே சிறந்தது என எண்ணிய  ஷிவம் டுபே, துணிந்தவராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

ஷிவம் டுபே, 30 பந்துகளில் 6 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 56 ஓட்டங்களைப் பெற்றதுடன்  முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனியுடன் 6ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

தோனி 23 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டமிழந்தார்.

Livingstone in action for PBKS.

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சில் ராகுல் சஹார் 25 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்களையும வைபாவ் அரோரா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது.

Pretorius showed bowling smarts and took two wickets.

மயான்க் அகர்வால் (4), பானுக்க ராஜபக்ஷ (9) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஆனால், ஷிக்கர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லிவிங்ஸ்டோன் 32 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 5 சிக்ஸ்களுடன் 60 ஓட்டஙகளைக் குவித்தார். தவான் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

Rabada celebrates the wicket of Gaikwad.

இவர்களை விட ஜீட்டேஷ் ஷர்மா 3 சிக்ஸ்களுடன் 26 ஓட்டங்களையும் கெகிசோ ரபாடா ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் ராகுல் சஹார் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

சென்னை சுப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டான் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09