இலங்கைக்கு கடத்தவிருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Published By: Digital Desk 4

03 Apr, 2022 | 02:04 PM
image

தமிழகத்தின் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்  சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் பொலிஸார் இன்று (3) காலை பறிமுதல் செய்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை மீனவர்கள் பிடிப்பதாக மெரைன் பொலிஸாருக்கு  தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து இன்று (3) அதிகாலை  கடற்கரையோரத்தில் இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் நிறுவனம் ஒன்றில்  மெரைன் பொலிஸார்  சோதனை செய்தபோது அங்கு சாக்கு பைகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் உயிருடன் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மெரைன் பொலிஸார்  உயிருடன் இருந்த சுமார் 300  கிலோ எடையுள்ள கடல் அட்டைகளையும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்ததா? என்ற கோணத்தில் தொடர்ந்து மெரைன் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47