எம்பிலிபிடிய புதிய நகர் பகுதியிலுள்ள சதோச களஞ்சியசாலையில் இன்று காலை 06.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

செவணகல தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

மேலும், சம்பவம் குறித்து எம்பிலிபிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.