மத்­திய கிழக்கு மற்றும் ஆபி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து ஐரோப்­பா­வுக்கு சட்­ட­வி­ரோத படகுப் பய­ணத்தை மேற்­கொண்டு வரும் குடி­யேற்­ற­வா­சிகள் படகு அனர்த்­தங்­களின் போது கடலில் மூழ்கி உயி­ரி­ழப்­பது அதி­க­ரித்து வரு­கி­றது.

இந்­நி­லையில் சட்­ட­வி­ரோத படகுப் பய­ணத்­துக்­கான ஏற்­பா­டு­களைச் செய்து வழங்கும் ஆட்­க­டத்­தல்­கா­ரர்­களால் கோர ப்­படும் பெருந்­தொ­கை­யான கட்­ட­ணத்தை வழங்­கு­வ­தற்கு வச­தி­யில்­லாத நப­ரொ­ருவர், துருக்­கி­யி­லி­ருந்து 8 கிலோ­மீற்றர் தூர ஆபத்து மிக்க கடல் பிராந்­தி­யத்தை தொடர்ந்து 7 மணி நேரம் நீந்திக் கடந்து கிரேக்­கத்தை வந்­த­டைந்­தமை தொடர்­பான செய்­திகள் சர்­வ­தேச ஊட­கங்­களில் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அமீர் மெஹ்ட்ர் என்ற சிரிய பிர­ஜையே இவ்­வாறு படகுப் பய­ணங்கள் மேற்­கொள்­வ­தற்கு அபா­ய­க­ர­மா­ன­தாக விளங்கும் மேற்­படி கடல் பிராந்­தி­யத்தை நீந்திக் கட க்கும் முயற்­சியில் ஈடு­பட்டு வெற்றி பெற்­றுள்ளார்.

அவர் இந்த நீச்சல் நட­வ­டிக்­கையின் போது தனது கரத்தில் தொங்­கிய பொதி யில் தயா­ராக வைக்­கப்­பட்­டி­ருந்த பேரீச்­சம்­ப­ழங்­களை உண்டு தனது பசியைத் தணி­வித்துக் கொண்­டுள்ளார்.

அத்­துடன் அவர் தனது மார்பில் சில ஆடைகள், இரு கணினி ஸிப் உப­க­ர­ண ங்கள், கைய­டக்கத்தொலை­பேசி முத­லிய பொருட்­களை கொண்ட பொதி­யொன் றைக் கட்­டி­யி­ருந்தார்.

கிரேக்கத் தீவான சமொஸை வந்­த­டைந்த அமீர், மேலும் ஏழரை மணி நேரம் கால்­ந­டை­யாகப் பயணம் செய்து அரு­கி­லி­ருந்த துறை­முக நகரை சென்­ற­டைந்­துள்ளார்.

தொடர்ந்து பெரும் முயற்­சியை மேற்­கொண்டு தற்­போது தனது இலக்­கான சுவீ­டனை அவர் வந்­த­டைந்­த­தை­ய­டுத்தே அவர் மேற்­கொண்ட ஆபத்­து­மிக்க கடல் பயணம் தொடர்­பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இது தொடர்பில் அமீர் சுவீடன் இணை­யத்­தள ஊட­க­மான டி.என். ஸிக்கு அளித்த பேட்­டியில், “நான் கடலில் நீந்திக் கொண்­டி­ருந்த ஒவ்­வொரு செக்­க­னிலும் நான் மர­ண­ம­டையப் போவ­தா­கவே கரு­தினேன். ஆனால் நான் தொடர்ந்து முன்­னோக்கி நீந்திக் கொண்­டி­ருந்தேன். நான் எனக்கு முன்­பாக தோன்­றிய குன்றுப் பகு­தியை நோக்கி நீந்திக் கொண்­டி­ருந்தேன். எனது எதிர்காலம் அந்தக் குன்றுப் பகு­தி­யி­லேயே இருப்­ப­தாக நான் தீவி­ர­மாக நம்­பி னேன்" என்று தெரி­வித்தார்.

சிரி­யாவில் தனது சொந்த இட­மான டம ஸ்கஸ் நகரில் தனது நண்பன் ஒருவன் அர­சாங்கப் படை­யி­னரின் சினைப்பர் தாக்­கு­தலில் பலி­யா­ன­தை­ய­டுத்து தனக்கு இரா­ணுவம் தொடர்பில் பீதி ஏற்­பட்­ட­தாக தெரி­வித்த அமீர், அர­சாங்கப் படை­யினர் இளை­ஞர்கள் அனை­வ­ரையும் அச்­சு­றுத்­த­லாக நோக்­கு­வதால் தானும் படை­யி­ன ரின் இலக்­காக மாறக் கூடும் என அஞ்­சி­ய­தாக கூறினார்.

5 வயது முதலே நீச்சல் பயிற்­சியில் ஈடு­பட்டு நீச்சல் பயிற்­று­ன­ராக கட­மை­யாற்­றிய தான் இறு­தியில் தனது உயிரைக் காப்­பாற்றிக் கொள்ள இந்த சவால் மிக்க நீச்சல் பய­ணத்தை மேற்­கொண்­ட­தாக தெரி­வித்தார்.