கொழும்பு மாநகரசபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தடைப்பட்டுள்ளன - ரோசி 

01 Apr, 2022 | 06:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அதிகாரிகளின் செயற்திறமையற்ற நடவடிக்கையாலும் அவர்களின் இயலாமையாலும் கொழும்பு மாநகரசபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தடைப்பட்டுள்ள. 

இதுதொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்,கொழும்பு மாநகரசபை மாதாந்த பொதுச்சபை மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் கூடியது. 

இதன்போது ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட பல வேலைத்திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. அதனால் மக்கள் மத்தியில் சென்று பதில் சொல்ல முடியாது இருக்கின்றோம் இதுதொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த எஸ்.பாஸ்கரா குறிப்பிடுகையில், பாராளுமன்றத்துக்கு அடுத்தபடியாக அதிகம் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது கொழும்பு மாநகரசபையாகும். 

மாநகரசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகார் மேயருக்கே இருக்கின்றது. 

நகரசபையினால் நிறைவேற்றப்படும் வேலைத்திட்டங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு  அழுத்தம் கொடுக்கவேண்டும். அதிகாரிகள் அதனை முறையாக செய்யாவிட்டால் அவரகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக வெள்ளவத்தை பிரதேசத்தில் கழிவு நீர் கட்டமைப்பில் வெடிப்பு ஏற்பட்டு அதனால் அசுத்தமான நீர் வெளியேறி வருகின்றது, இது கடந்த 10வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகும். 

இதனை திருத்தும் நடவடிக்கைக்கு நகரசபை அனுமதியளித்தும் வேலைத்திட்டம் இடம்பெறாமல் இருந்து வந்தது. 

தற்போது திருத்தும் வேலை இடம்பெறுகின்றபோதும் மிகவும் மந்தகதியிலே நடக்கின்றது அதனால் இதனை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். 

கழிவு நீர் கசிவு காரணமாக அந்த பிரதேசத்தில் இருக்கும்  சுமார் 5ஆயிரம் குடும்பத்தினர் வரை பாதிப்படைந்துள்ளனர் என்றார்.

அதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரம்சி டோனி குறிப்பிடுகையில், மாநகரசபையினால் மேற்கொள்ளப்படவேண்டிய பல வேலைத்திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. 

மாநகரசபை ஆணையாளரின் நடவடிக்கையே இதற்கு காரணமாகும். ஆணையாளர் புதிதாக நியமிக்கப்பட்டவர். அனுபவம் இல்லாதவர். அதனால் மாநகரசபை வேலைத்திட்டங்கள் அவருக்கு தெரியாது. எனவே அனுபவமும் திறமையும் உடைய ஆணையாளர் ஒருவரை நியமிக்க அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மொஹமட் நெளபர் குறிப்பிடுகையில், மேல்மாகாண ஆளுநர் மாநகரசபையின் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் தலையிட்டு வருகின்றார். 

மாநகரசபையினால் பிரேரணை ஒன்று அனுமதிக்கப்பட்டால் அதனை  எந்த காரணமும் இன்றி தடைசெய்ய அவருக்கு முடியாது. 

என்றாலும் ஒருசிலரின் முறைப்பாடுகள் காரணமாக ஆளுநர் மாநகரசபையின் வேலைத்திட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றார். 

மாநகரசபையினால் அனுப்பப்படும் கடிதங்களை ஆளுநர் வாசித்து பார்க்கிறாரா என எமக்கு சந்தேகம் இவ்வாறான ஒரு ஆளுநரை நாங்கள் இதுவரை காலமும் கண்டதில்லை.

மொட்டு கட்சி உறுப்பினர்கள் இதுதொடர்பாக ஆளுநருக்கு தெளிவுபடுத்தவேண்டும். ஆளுநரின் நடவடிக்கையால் மாநகர சபை மக்களுக்கு செய்யவேண்டிய பல வேலைத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இறுதியாக இதற்கு மேயர்  ரோசி சேனாநாயக்க பதிலளிக்கையில், 

உறுப்பினர்களின் பிரேரணைகள் சபையில் நிறைவேற்றப்பட்டால் அதுதொடர்பில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படுகின்றது. 

என்றாலும் அதிகாரிகளின் செயற்திறமை இன்மை மற்றும் அவர்களின் இயலாமை காரணமாக மாநகரசபையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

இதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31