அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் 

01 Apr, 2022 | 01:03 PM
image

(என்.வீ.ஏ.)

லாகூர் கடாபி விளையாட்டரங்கில் கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்டதும் 2 அணிகளிலும் 3 சதங்கள் பெறப்பட்டதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றிகொண்டது.

Fakhar Zaman and Imam-ul-Haq put on a century stand for the first wicket, Pakistan vs Australia, 2nd ODI, Lahore, March 31, 2022

இரண்டாவது போட்டியில் ஈட்டப்பட்ட இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 1 - 1 என சமப்படுத்திக்கொண்டது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 349 ஓட்டங்களானது பாகிஸ்தான் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெ ற்ற  சாதனைமிகு அதி கூடிய எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னர் பங்களாதேஷினால் 2014 ஆசிய கிண்ணத்தில் நிர்ணயிக்கப்பட்ட 327 ஓட்டங்களே பாகிஸ்தான் எட்டிப்பிடித்த அதிகூடிய வெற்றி இலக்காக இருந்தது.

Imam-ul-Haq gets a hug from his captain, Babar Azam, after getting to his century, Pakistan vs Australia, 2nd ODI, Lahore, March 31, 2022

அவுஸ்திரேலியா சார்பாக பென் மெக்டர்மட் கன்னிச் சதம் குவித்த போதிலும் பாகிஸ்தான் சார்பாக இமாம்-உல்-ஹக், அணித் தலைவர் பாபர் அஸாம் ஆகியோர் குவித்த சதங்கள் அதனை வீண்போகச் செய்தன.

இரண்டு அணிகளிலும் ஆரொன் பின்சைத் தவிர ஏனைய முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 348 ஓட்டங்களைக் குவித்தது.

Ben McDermott raises his bat after getting to fifty, Pakistan vs Australia, 2nd ODI, Lahore, March 31, 2022

அணித் தலைவர் ஆரொன் பின்ச் 3ஆவது பந்தில் ஓட்டம் பெறால் ஆட்டம் இழந்தபோதிலும் ட்ரெவிஸ் ஹெட், பென் மெக்டர்மட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 162 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

ட்ரவிஸ் ஹெட் 6 பவுண்ட்றிகள், 5 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த பின்னர் பென் மெக்டர்மட், மார்னுஸ் லபுஸ்சான் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மெக்டர்மட் 10 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்களுடன் 104 ஓட்டங்களையும் லபுஸ்சான் 59 ஓட்டங்களையும் பெற்றனர், அவர்களைத் தொடரந்து மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Zahid Mahmood loads up to bowl, Pakistan vs Australia, 1st ODI, Lahore, March 29, 2022

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 49 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.

பக்கார் ஸமான், இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச்செய்தன.

பக்கார் ஸமான் 64 பந்துகளில் 7 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்றதுடன் இமாம்-உல்-ஹககுடன் ஆரம்ப விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

Alex Carey is bowled around his legs for 4, Pakistan vs Australia, 1st ODI, Lahore, March 29, 2022

2ஆவது விக்கெட்டில் பாபர் அஸாமுடன் மேலும 109 ஓட்டங்களைப் பகிர்ந்த இமாம்-உல்-ஹக் 97 பந்துகளில் 6 பவுணட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

பாபர் அஸாம் 83 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 11 பவுண்ட்றிகள் ஒரு சிக்ஸுடன் 114 ஒட்டங்களைக் குவித்தார்.

அவர்களை விட மொஹம்மத் ரிஸ்வான் 23 ஓட்டங்களையும் குஷ்தில் ஷா ஆடடமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Adam Zampa bagged four wickets in the match, Pakistan vs Australia, 1st ODI, Lahore, March 29, 2022

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09