மூன்றரைக் கோடி ரூபா கொள்ளை : பிரதான சூத்திரதாரி செட்டியார் தெரு தங்க நகை வர்த்தகர்

Published By: Robert

19 Oct, 2016 | 09:16 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஆட்­டுப்­பட்டித் தெரு, கன்னாரத் தெரு வில் தங்க நகை செய்யும் இட­மொன்றில் இடம்­பெற்ற சுமார் மூன்­றரைக் கோடி ரூபா பெறு­ம­தி­யான பணம் மற்றும் நகைக் கொள்­ளையின் பிர­தான சூத்­தி­ர­தாரி செட்­டி யார் தெரு தங்கநகை வர்த்­தகர் ஒருவர் என விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. 

மேற்­படி கொள்ளை தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கடந்த சனி­யன்று நால்­வரை கைது செய்த நிலையில் அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த தகவல் தெரி­ய­வந்­துள்­ளது. எனினும் தற்­போது குறித்த வர்த்­தகர் நாட்­டி­லி­ருந்து தப்பி  சென்­றுள்­ள­தாக பொலிஸார் சந்­தேகம் தெரி­விக்­கின்­றனர். 

கோடீஸ்­வர வர்த்­தகர் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ள மேற்­படி வர்த்­தகர், கொள்­ளை­யி­டப்­பட்ட தங்க நகை விற்­பனை நிலைய உரி­மை­யா­ள­ருடன் இருந்த வைராக்­கி­யத்தில், அவ­ரது நகை விற்­ப­னையை வீழ்ச்­சி­ய­டையச் செய்யும் நோக்கில்  6 இலட்சம் ரூபா ஒப்­பந்த அடிப்­ப­டையில் இக்­கொள்­ளையை கொள்ளைக் குழு­வொன்­றுக்கு கைய­ளித்­துள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் கேச­ரிக்கு தெரி­வித்­தன.  

 கொள்­ளை­யி­டப்­பட்ட தங்க நகை விற்­பனை நிலை­யத்தில், நகை தயா­ரிக்கும்  பணியில் இருந்த ஏழு  இந்­தி­யர்­களை நாட்டில் இருந்து விரட்­டி­ய­டிப்­பது, இத்­திட்­டத்தின் முதல் நோக்­க­மாக இருந்­துள்­ள­தா­கவும், அதனால் அவர்­க­ளது கடவுச் சீட்­டுக்­களைப் பெற்று தன்­னிடம் தரு­மாறு ஒப்­பந்தம் வழங்­கி­ய­தாக கூறப்­படும் கோடீச்­வர வர்த்­தகர் கொள்­ளை­யர்­க­ளிடம் கூரி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   இத­னா­லேயே வெளி­வி­வ­கார அமைச்சின் மோசடி தடுப்புப் பிரிவைப் போன்று வேட­மிட்டு இக்­கொள்ளை  மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக விசா­ரணைத் தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

எவ்­வா­றா­யினும் இக்­கொள்­ளை­யுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ரான ஆமி சம்பத் எனப்­படும் கேகாலை பகு­தியைச் சேர்ந்த இரா­ணு­வத்தின் விஷேட படைப் பிரிவின் வீர­ரையும்  மேலும் மூவ­ரையும் கைது செய்­துள்ள பொலிஸார், கிரி­பத்­கொடை பொலிஸ் நிலை­யத்தின் உளவுப் பிரிவு பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் (எஸ்.ஐ.) உள்­ளிட்ட மேலும் மூவரை தேடி வரு­கின்­றனர். அம்­மூ­வரும் ஒன்­றாக இருப்­ப­தாக சந்­தே­கிக்கும் பொலிசார் விசா­ர­ணை­களை தொடர்­கின்­ரனர்.

கடந்த மாதம்  இந்த பாரிய கொள்­ளை­யா­னது சனிக்­கி­ழமை ஒன்றில் பிர்­பகல் 2.30 மணி­ய­ளவில் பதி­வா­கி­யி­ருந்­தது. 

இது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்திரதிலகவின் ஆலோசனைக்கு அமைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா உள்ளிட்டோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04