தடையின்றி மருந்துகளை கொள்வனவு செய்ய உதவுமாறு உலக வங்கியிடம் கோரிக்கை

Published By: Digital Desk 3

31 Mar, 2022 | 05:22 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் காணப்படும் டொலர் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு தடையின்றி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உதவுமாறு ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உலக வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர் லினே ஷர்பன் பென்ஸ் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண இந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

நாட்டில் காணப்படும் அந்நிய செலாவணி நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு தேவையான மருந்துகளை தடையின்றி பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கி உதவ வேண்டும் என்று இராஜாங்க அமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஷர்பன் பென்ஸ் , அதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஷர்பன் பென்ஸ் இதன் போது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய நிதி உதவிக்கும் இராஜாங்க அமைச்சர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21